அமேசானில் ஓர் இந்திய நதி!
பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும் கொண்டது, தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் காடு. இங்கு தான், உலகின் மிகப் பெரிய, அமேசான் நதி ஓடுகிறது. இதன் அகலம், 190 கி.மீ., இந்நதியிலிருந்து, 1,100 கிளை நதிகள் பிரிந்து செல்கின்றன. அவற்றில், 1,500 கி.மீ., நீளமுள்ள கிளை நதிகள், மொத்தம் 17. இவ்வளவு சிறப்பு மிக்க இந்நதிக்கு அடியில் தான், இந்தியரின் பெயரில் ஓர் நதி ஓடுகிறது. என்ன ஆச்சரியமாக உள்ளதா...கடந்த, 1970ல், வாலியா ஹம்சா என்ற இந்திய ஆய்வாளரின் தலைமையில், அமேசான் நதியில் எண்ணெய் கிணறுகள் தோண்டும் பணி நடந்தது. அப்போது தான், அமேசான் நதிக்கு அடியில், 13 ஆயிரம் அடி ஆழத்தில், 6,000 கி.மீ., நீளத்தில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நதிக்கு, இந்திய ஆய்வாளரின் பெயரையே சூட்டி, 'ஹம்சா நதி' என்று அழைக்கின்றனர். இந்நதி குறித்து, 1970லிருந்து, 40 ஆண்டுகள் ஆய்வு செய்துள்ளார், வாலியா ஹம்சா!