உள்ளூர் செய்திகள்

ஆந்திராவின் காஷ்மீர்!

ஆந்திர மாநிலத்தில், விசாகப்பட்டினம் மாவட்டம், சிந்தபள்ளி தாலுகாவில், லம்பாசிங்கி என்று, ஒரு கிராமம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதை, 'ஆந்திராவின் காஷ்மீர்' என, அழைக்கின்றனர்.குளிர் காலத்தில், வட மாநிலங்களில் ஏற்படும் பனிப் பொழிவை போல். லம்பாசிங்கியிலும் காணலாம்.குளிர் காலமான, நவம்பர் முதல் ஜனவரி வரை, இங்கு, தினமும் விழும் பனி, ஐஸ் கட்டிகளாகி, கிராமத்தை வெள்ளை மயமாக ஆக்கியுள்ளது. இங்கு தங்கவோ, சாப்பிடவோ, ஓட்டல்களோ, விடுதிகளோ கிடையாது. மொத்த ஜனத்தொகையே, 1,000த்திற்குள் தான். அனைவரும், டிரிபோடோ மலை ஜாதியினர். சுற்றுலா பயணியர் தங்குவதற்காக, குடிசைகளை ஒதுக்கி தந்து உதவுகின்றனர். இந்த கிராமத்திற்கு, 'சொர்ர பாயலு' என்ற, செல்ல பெயர் உண்டு. இதன் பொருள், 'இரவு ஒருவன், உடம்பில் ஒன்றுமில்லாமல், வெட்ட வெளியில் படுத்தால், காலையில் உறைந்து கட்டையாக இருப்பான்...' என்பதாகும்.விசாகப்பட்டினத்திலிருந்து, இரண்டு மணி நேர பயணத்தில், லம்பாசிங்கியை அடையலாம்!- ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !