அந்துமணி பதில்கள்
*இ.முத்துப்பாண்டி, மதுரை : உங்களுக்கு சமையல், கை வந்த கலையா?எந்த, 'ஐட்டம்' வேண்டும்? அவியல், எரிசேரி, புளிசேரி, சாம்பார் என, லோக்கல் சமாச்சாரங்களா? பாவ்பாஜி, கோப்தா, நவரத்ன குருமா, தால் மக்னி போன்ற வட மாநில சமையலா? எல்லாம் எப்பவோ பக்குவப்பட்டு போச்சுங்க!*****சி.மாரியப்பன், குலமங்கலம் : காதலில் தோல்வி கண்டால், முதலில் மனதைத் தேற்றி கொள்வது ஆண்களா, பெண்களா?ஆண்கள்தான்! இந்த விஷயத்தில் மட்டும், 'பிராக்டிகல்' ஆக சிந்திக்கக் கூடியவர்கள் ஆண்கள் தான்! 'ஓ.கே., இது முடிஞ்சு போச்சு... வாட் நெக்ஸ்ட்?' என அடுத்தக் கட்டத்திற்கு சென்று விடுவர்... பெண்களால் அவ்வளவு சுலபத்தில் முடியாது!****எம்.நாச்சியப்பன், பரமக்குடி : ஒருவனுக்கு விரக்தி ஏற்படும்போது, எதை இழக்கத் துணிவான்?உயிரைக் கூட துறக்க எத்தனிப்பான். ஆனால், அது துணிவு அல்ல. விரக்தி ஏற்பட காரணமாயிருந்த சம்பவத்தை, இரண்டு காலிலும் போட்டு மிதித்து, வெற்றியின் சந்தோஷத்தின் முதல் படிக்கட்டாக அதைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்!****எச்.யமுனா, செய்யார்: மனைவிக்கு, எந்த வகையில் கணவன் உதவலாம்?தன் வேலையைத் தானே செய்து கொள்வதன் மூலம் உதவலாம்... 'ஏய்... துண்டு எடுத்துக் கிட்டு வா, சட்டைக்கு இஸ்திரி போடு, ஷூஸ் எங்கே?' - இப்படி எல்லாம் விரட்ட வேண்டாம்! முடிந்தால், சாப்பிட்ட பிளேட்டை, காலி டம்ளரை கழுவி வைத்தாலே பெரிய உதவி தான்! *****ஏ.ஈஷ்வர், ஆலங்குளம் : நான் பிளஸ் 2 பெயிலானவன். குடும்பத் தொழிலான விவசாயம் பார்க்கச் சொல்கின்றனர் வீட்டில் உள்ளவர்கள்! ஆனால், நான் மெக்கானிசம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்!விவசாயம் சம்பந்தப்பட்ட கருவிகளை பழுது நீக்க கற்றுக்கொண்டு, விவசாயம் பாருங்கள்; மெயின் வருமானம் குடும்ப நிலத்தின் மூலம்; சைடு வருமானம், கற்றுக் கொண்ட மெக்கானிசத்தின் மூலம்!****கே.சாந்தமூர்த்தி, புதுவை: வி.ஆர்.எஸ்., திட்டத்தால், வெளியேறிய வர்கள் வாழ்வு வளமாக உள்ளதா, அதை இனி வரும் காலங்களில் பெற்றுக் கொள்வது உசிதமா?வளத்தில் குறைச்சல் இல்லை... ஆனால், தமக்கென ஒரு பொழுதுபோக்கு இல்லாதவர்கள், அதை வளர்த்துக் கொள்ள தெரியாதவர்கள் - பரபரப்பு உலகில் இருந்து விட்டு இப்போது நேரத்தைப் போக்க தெரியாமல் அவதிப்படுகின்றனர்!***** பொ.ஜெயசீலன், வேலூர்: 'எதிர்த்துப் பேசுவது' - 'பேசாமல் காதைப் பொத்திக் கொள்வது' - 'வெளியில் சென்று விடுவது' - இந்த மூன்றில் எதைச் செய்வீர்கள், மனைவி உங்களைத் திட்டும் போது...அட போங்க சார்... அதுக்கெல்லாம் இங்கே சான்ஸே இல்லை. இருந்தாலும், இந்த கேள்விகளைத் தூக்கி மாமாவிடம் போட்டேன்.... 'இது பெரிய விஷயமாப்பா... மகாநதி படத்துல கமலஹாசன் செய்வாரே, அது மாதிரி, கத்திக்கிட்டிருக்கிற மனைவி வாயை, உம் வாயால் மூடி விட வேண்டியது தானே!' என, ஒரு போடு போட்டார்... ஓடியே போனேன் நான்!***