உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

** வி.துரைச்சாமி, கோவில்பட்டி: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி. தன்னைத் தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால், இழி நிலைக்கு தள்ளப்படுவார். பின், உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!****கே.மரியராஜ், பீளமேடு: என் மனம், எப்போதும், ஓயாத கவலையில் ஆழ்கிறதே...மனசாட்சி சொல்வதைக் கேட்காமல் நடந்தால், கடல் அலை போல ஓயாத கவலை ஏற்பட்டு, வாட்டி வதைக்கத் தான் செய்யும். எனவே, மனசாட்சி சொல்வதை மதிக்க பழகுங்கள்!***** ஆர்.ராமகிருஷ்ணன், தேவதானபட்டி: எந்த விஷயத்திலும் குழப்பமே மிஞ்சுகிறது என்னிடத்தில்... இது ஏன்?தெளிவான அறிவு எதிலும் இல்லாததே, இந்த நிலைக்குக் காரணம். எடுத்துக் கொள்ளும் செயல் பற்றி, அ முதல் ஃ வரை, முழுமையாக அறிந்து செயல்பட்டால், குழப்பம் ஏற்படாது. இதற்கு பயிற்சியும், வழி காட்டுதலும் தேவைப்படும்.****க.ராமசுப்ரமணி, கோபாலபுரம்: உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை; என்ன செய்வது?உங்களுக்கு சாமர்த்தியம் போதவில்லை எனத் தெரிகிறது. காலுக்கு பொருந்தாத செருப்பை கழற்றி எறிந்து விட்டு போயிடணும்!****சி.ஜெகன்நாதன், அல்லிநகரம்: செழுமையாக வாழ ஆசைப்படுகிறேன்... நான் என்ன செய்ய வேண்டும்; என்னிடம் என்ன குணம் இருக்க வேண்டும்?செழுமைக்கு மூல காரணமாக இருப்பது, செயல் திறன். எனவே, செயல்திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். செழுமைக்கு முதல் எதிரி, சோம்பேறித்தனம்; அது இருந்தால், விரட்டி அடியுங்கள்.*****எ.ஜீவதுரை, சென்னை: பெண் என்பவள், ஒருவனுக்கு, எப்போது முள்ளாகத் தெரிகிறாள்?தன் சொல்படியே நடக்க வேண்டும். தான் நினைத்தபடியே நடக்க வேண்டும் என, பெண் எண்ணி செயல்படும் போதும், எதிர்பார்ப்புகள், ஆணின் எல்லையைத் தாண்டும் போதும், முள்ளாய்த் தெரிகிறாள்!****ஜெ.நரசிம்மன், காரைக்குடி: எந்த செயலிலும் எனக்கு தோல்வியே ஏற்படுகிறதே...என் தலை எழுத்து இது தானோ?தலை எழுத்து, கால் எழுத்து என்பதெல்லாம், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள, நாமே ஏற்படுத்திக் கொண்ட போலி கோட்பாடுகள். யாரிடத்தில் பயமும், தயக்கமும் நிறைந்து உள்ளதோ, அவரை துரத்திக் கொண்டே இருக்கும் தோல்வி! மேற்சொன்ன இரண்டையும் ஒழித்துக் கட்டுங்கள்... பின்னர் பாருங்கள்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !