அந்துமணி பதில்கள்
எஸ்.வி.சீனிச்சாமி, காமயகவுண்டன்பட்டி: நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் புகழ்கின்றனரே...உங்களிடம் இப்போது பண ஓட்டம் அதிகமாக இருக்கிறது என, நினைக்கிறேன். பண ஓட்டம் அதிகமாக இருப்பவர்களிடம் நெருக்கமாக பழகி, அவர்களை முகஸ்துதி செய்து, தம் காரியங்களை சாதித்துக் கொள்ளவே இவ் வாறு நடந்து கொள்வர். முகஸ்துதி செய்பவர்களை நம்பி விடாதீர்கள். உங்களை மோசம் செய்யவே இந்த புகழ் மாலை.எம்.பாரிவேந்தன், தஞ்சாவூர்: என்னை சுற்றியுள்ளவர்களில் பலரும் கெட்டவர்களாக உள்ளனர். நான் மட்டும் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்?நல்லவர்களாக இருந்தால், தடையற்ற திருப்தியும், கலை யாத அமைதியும் கிட்டும்; துன்பங்களையும், துயரங்களையும் கடந்து செல்ல முடியும். நல்லவர் களாக இருப்பவர்களுக்கு, அவர் களின் எல்லை எதுவென்று தெரி யும். அதனால், உண்மையுடனே நடந்து இன்புற முடியும்.பி.வேலவன், கோவை: மன நிம்மதியோடு வாழ வழி சொல்லுங்களேன்...அடுத்தவரின் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படும் குணத்தை ஒழியுங்கள்; ஆசையை, தேவைகளை குறையுங்கள்; தானா தேடிவரும் மன நிம்மதி! டி.வி.கலைமுகிலன், பொன்நகர்: தீக்குளிக்கும் தொண்டன்...முட்டாள்; ஏதாவது ஒரு பிரச்னைக்காக, இதுவரை எந்த தலைவனாவது, மண்ணெண்ணெய் டின்னையும், தீப்பெட்டியையும், கையில் எடுத்திருக்கிறானா எனப் பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத மூடன்!கே.அருண்சந்திரன், கோவில்பட்டி: அதிர்ஷ்டம் யார் வீட்டுக் கதவை அதிகமாக தட்டுகிறது?சளைக்காமல், புத்தி கூர்மையுடன் வேலை செய்யும் அனைவரையும் வெற்றி வந்து அடைகிறது. இந்த வெற்றியை, அதிர்ஷ்டம் என நம்பி, எப்போ வந்து கதவை தட்டும் என, காத்திருக்கும் வீணர்களுக்கு ஒரு நாளும் வெற்றி கிடைக்காது!என்.விண்மதி, பெரியகுளம்: வெளிநாட்டு பெண்கள் கற்பை மதிக்கின்றனரா?கற்பு என்பதே சர்ச்சைக்குரிய விஷயமாகி வருகிறது. 'உடலால், மனதால்...' போன்ற வரைமுறையையும் சிலர் வகுத்துக் கொண்டுள்ளனர். வெளிநாட்டுப் பெண்கள், குறிப்பாக அமெரிக்க பெண்கள் இதைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை!ஆர்.ரமணி, மயிலாப்பூர்: 'நாங்க அந்தக் காலத்திலே...' என்று கூறி, 'அட்வைஸ்' செய்யும் பெரிசுகளின் தொந்தரவு அதிகமாகி விட்டதே...சிறியவர்கள், இதைத் தொந்தரவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் அனுபவங்கள் விலைமதிக்க முடியாதவை. 'தீ சுடும்...' என்று, அனுபவப்பட்ட பெரிசு கூறினால், 'இல்லை நானும் அனுபவப்பட்டுத்தான் தெரிந்து கொள்வேன்...' என்பது, எவ்வளவு மூடத்தனம்!சரி; இது ஒரு பக்கம் இருக்கட்டும். பெரிசுகள், தம்மிடம் யாருமே பேச விரும்பவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பர். அவர்களிடம் ஒரு அரை மணி நேரம் பேசினால், என்ன குறைந்துவிடப் போகிறது!சி.மனோகரன், கூடலூர்: யாரிடம் பேசாமலிருப்பது நல்லது?வம்பர், துடுக்கர், புறம் பேசுவோர், கோள் மூட்டிகள்!மு.சாதிக்பாட்ஷா, துலுக்கப்பட்டி: சோவியத் யூனியனின் நிலை, இந்தியாவுக்கும் ஏற்படும் என, நினைக்கிறீர்களா?நிச்சயம் ஏற்படாது. இங்கு, ஒரு கட்சி ஆட்சி முறை இல்லை; சுதந்திரமாக பேச அனுமதியுண்டு; தவறு செய்யும், ஆளும் கட்சியைத் தட்டிக் கேட்க, பொறுப்பான எதிர்க் கட்சிகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, 'நாம் இந்தியர்' என்ற ஒற்றுமை உணர்வு கொண்டவர்கள் நாம்!