உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

ஜே.நமசிவாயம், புதுப்பேட்டை: காதலித்தவன் ஏமாற்றி விட்டால், அழுது புலம்பாமல், உடனடியாக இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் பெண்களிடம் வந்து விட்டதே...அழுது, புலம்பி அவனையே நினைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்ற உண்மையை இப்போதாவது உணர ஆரம்பித்துள்ளனரே பெண்கள்... பாராட்டி வரவேற்க வேண்டிய மாற்றம் தான்! எம்.அண்ணாமலை, டி.வி.எஸ்.,நகர்: வயதான ஆண்களை மணக்க சம்மதிக்கும் இளம் பெண்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?இளவட்டங்களை விட வயதானவர்கள் அனுபவப்பட்டவர்களாகவும், பக்குவப்பட்டவர்களாகவும் இருப்பர். இதனால், அவர்களால், பெண்களைப் புரிந்து கொள்ள முடிவதுடன், அவர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்து கொள்ள முடியும். மேலும், வாழத் தேவையான பணத்தை ஈட்டி, செட்டில் ஆகி இருப்பர்.- இந்தக் காரணங்கள், இளம் பெண்களை ஈர்க்கின்றன போலும்!ஜி.அன்வர் அலி, பல்லடம்: சாதாரண மனிதன் ஒருவனுக்கு ஈகை குணமும், தாராள புத்தியும், நல்ல குணமும் எத்தனை வயதில் ஏற்படும்?இந்த பரபரப்பான உலகில், நீங்கள் கூறிய பண்புகள் எல்லாம் சாதாரண மனிதன் ஒருவனுக்கு, சாகக் கிடக்கும் தறுவாயில் தான் வருகிறது!கே.ரமேஷ், பட்டாபிராம்: ஒரே இரவில் கூட மனிதனின் தலைமுடி முழுவதும் நரைத்துப் போக வாய்ப்புள்ளதாக கூறுகிறான் என் நண்பன்; இது உண்மையா?தாங்க முடியாத துயர், கவலைகளினால் இது நடக்க வாய்ப்புள்ளதாகவே நான் அறிகிறேன். அமெரிக்காவை கண்டுபிடிக்க, கப்பலில் சென்று கொண்டிருந்த கொலம்பசின் சக மாலுமியர், 'இனி பயணத்தை தொடர ஒத்துழைக்க மாட்டோம்...' எனக் கூறிய வேளையில், கொலம்பசின் தலை முடி முழுவதும் ஒரே இரவில் நரைத்துப் போனதாக படித்துள்ளேன்! எஸ்.குணசேகரன், சைதாப்பேட்டை: நான் ஒரு கட்சியின் தொண்டனாகி விட்டேன்; என் கட்சியின் தலைவனுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?உங்கள் கட்சி தலைவன் தன் வாரிசுகளுக்கு கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க ஒரு கருவியாக உள்ளீர்கள். அதே சமயம், உங்கள் நேரம், உழைப்பு, பொருள் அனைத்தையும் தலைவனின் முன்னேற்றத்திற்கு வீணடிப்பீர்கள். உங்கள் தலைவன் செத்தால் தூக்குவதற்கு ஓடோடி செல்வீர்கள்; நீங்கள் செத்தால், அனுதாப செய்தி கூட வெளியிட மாட்டார் தலைவர். போதுமா, வித்தியாசம்! வி.நந்தகுமார், புதுச்சேரி: எதிர் காலத்தில் கஷ்டப்படாமல் சவுக்கியமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பதற்காக தகுதிக்கு மீறி, வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளும் போலி கவுரவத்தை ஒழித்து, எளிய வாழ்க்கை வாழ்ந்தால் சவுக்கியம் நிரந்தரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !