அந்துமணி பதில்கள்
எஸ்.கணேசன், ஆர்.எஸ்.புரம்: குடும்பத்தை குதூகலமாக்குவது கணவரின் வருமானமா, மனைவியின் நிர்வாகத் திறனா?சந்தேகமேயில்லாமல் இரண்டாவதே... எவ்வளவு குறைந்த வருமானம் கொண்டு வந்தாலும், அதில் கூட மிச்சம் வைக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் தான். 99 சதவீத பெண்களுக்கு இது கைவந்த கலை. பெண்களின் நிர்வாகத் திறமையே குடும்பத்தில் குதூகலம் நிலவக் காரணம்!எம்.செல்வக்குமார், பரமகுடி: சில பெண்கள் அளவுக்கதிகமாக நகை அணிவதேன்?தற்பெருமையடித்துக் கொள்ள, தங்களிடம் உள்ள செல்வச் செழிப்பை வெளிப்படுத்தி, மற்ற பெண்களை, தோழியரை, அக்கம் பக்கத்தாரை, உறவினர் பெண்களை பொறாமை கொள்ள வைக்க, அதைப் பார்த்து, இவர்கள் சந்தோஷம் கொள்ள நகை அணிகின்றனர் சில பெண்கள். இதில் பரிதாபம் என்னவென்றால், இப்படி நகை அணிபவர்களில் பலருக்கு கழுத்தே இருப்பதில்லை. திருமணமானவர் என்றால் தாலி பிளஸ் ஒரு நெக்லஸ்... ஆகாதவர் என்றால், ஒற்றை சங்கிலி போதுமே... விசேஷ தினங்களில் அணிய!பி.முத்தரசன், கோவை: இப்போதெல்லாம், ஆங்கிலப் பள்ளியில் படித்தால் தான் வேலை கிடைக்குமாம்... வசதி இன்மை காரணமாக, என் பிள்ளையை அரசு ஆரம்பப் பள்ளியில் சேர்த்துள்ளேன். என் குழந்தைக்கு சிறந்த எதிர்காலம் உண்டா?ஆங்கிலப் பள்ளி என்ற பெயரில், ஆங்காங்கே காளான்கள் போல தோன்றி வரும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது தான் ஆபத்தானது. அங்கு கல்வி கற்றுக் கொடுப்போர், 90 சதவீதம் பேர் முறையான பயிற்சி எடுத்தவர்கள் அல்ல. தமிழும் தெரியாது; ஆங்கிலமும் தெரியாதவர்கள். இவர்களிடம் படிக்கும் பிள்ளைகளுக்கு எந்த, 'சப்ஜெக்ட்'டிலும் புலமை இல்லாமல் போய் விடுகிறது என்பதே உண்மை. அரசு பள்ளிகளில் இப்போது, பொதுத் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் வருவதை, பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்களே...ஜி.மகாதேவன், காரியாபட்டி: கை தூக்கிவிட ஆளில்லையே...' என புலம்புகின்றனரே...இவர்கள் சுயமுயற்சி இல்லாதவர்கள், சோம்பேறிகள், துணிச்சல், தன்னம்பிக்கை அற்றவர்கள்; கடைசி வரை புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! என்.அருண்குமார், வளசரவாக்கம்: வாசகர்களின் ரசனை அடிக்கடி மாறுவதாக கருதுகிறீர்களா... எதனால்?வாசகர்களின் ரசனை, அடிக்கடி மாறத்தான் செய்கிறது. ஆனால், வாசகியர் அப்படி அல்ல; வாசகர்கள், அலை பாயும் மனம் கொண்டவர்களாக இருப்பதாலேயே இந்த தடுமாற்றம்!எம்.மதுசூதனன், திருப்பூர்:மாபியா' கும்பல்ன்னா என்னாங்க?'மாபியா' என்பது இத்தாலிய சொல். 'என்னை காப்பாற்று' என்பது இதன் பொருள். இளம் பெண் ஒருத்தியை, ரவுடிக் கும்பல் ஒன்று துரத்திய போது, அவள், 'மாபியா... மாபியா...' என்று அலறியபடியே ஓடினாளாம். அப்போது முதல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கும்பலைக் குறிக்க இச்சொல் பயன்பாட்டுக்கு வந்தது.என்.விஜயா, மார்த்தாண்டம்: உள்ளத்தில் உள்ள ரகசியங்களை பரிமாறிக் கொள்ள ஏற்ற தோழியை எப்படி தேர்ந்தெடுப்பது?சிறந்த தோழி, 40 பக்க நோட்டு; அதில் எழுதுங்கள்... ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள்; தீயிட்டு கொளுத்தி விடுங்கள். அந்தரங்க நண்பியாக எவரையும் கருத முடியாத காலமாக அல்லவா உள்ளது, இக்காலம்!ப.ஷாலோம், புதுச்சேரி: தன்னிலையை ஒருவன் எப்போது அறிகிறான்?கல்யாணம் ஆன பின், குடும்பம் நடத்த பணத்திற்கு அலையாய் அலையும் போது!