அந்துமணி பதில்கள்
ஹெச்.சந்திரசேகரன், திண்டுக்கல்: ப்ரீயா பேசினால் ஓட்டவாயன்; அளந்து பேசினால், உம்மணா மூஞ்சி என்கின்றனரே...பேசாமலே இருந்தால், 'அமுக்கன்' என்பர். நம்ம ஜனங்கள் சூட்டும் நாமகரணங்களுக்கு அளவேது சாமி... நீங்கள் நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள்; அவன் சொன்னான், இவன் சொன்னான் என்பதற்காக, ஒவ்வொரு அரை வினாடியிலும் உங்களை மாற்றிக் கொள்ள முடியுமா என்ன!எஸ்.ஆனந்தகுமார், உடுமலைப்பேட்டை: திருமணத்திற்கு முன், தன் கணவன் வேறு ஒருத்தியின் காதலன் என்பதை மனைவி சகித்துக் கொள்ளும் போது, அதே கணவன், தன் மனைவி திருமணத்திற்கு முன், வேறு ஒருத்தனின் காதலி என்பதை, ஏன் சகித்துக் கொள்வதில்லை?ஆண்களில், 90 சதவீதம், எம்.சி.பி.,களாக இருப்பது தான்! எம்.சி.பி.,யின் விளக்கத்தை விலாவரியாக எழுதினால், பிரச்னை ஏற்படுத்தி விடுவர் ஆண்கள். கல்லூரி மாணவர்களிடமிருந்து, அதற்கான பொருளை தெரிந்து கொள்ளுங்கள்!உ.செய்யது அலி பாத்திமா, திண்டிவனம்: பெண்களை நேருக்கு நேர் பார்ப்பவன் சிறந்தவனா, சென்றபின் பார்ப்பவனா அல்லது பார்க்காமலே செல்பவன் சிறந்தவனா?பார்க்காமலேயே செல்பவன் கூச்ச சுபாவம் உள்ளவன்; பயந்தவன். சென்ற பின் பார்ப்பவன், திருடன்; கண்ணை நேருக்கு நேர் நோக்குபவனைப் பற்றி இப்போது தெரிந்திருக்குமே...கே.அகமது, புதுச்சேரி: ஒரு பெண்ணின் அழகை ஆண் ரசிக்கிறான்; அதுபோல், ஆண்களை, பெண்கள் ரசிப்பது உண்டா?என்னங்க அதிசய கேள்வி கேட்கிறீங்க... அவர்களும் மானிடர்கள் தானே... அவர்களுக்கும் ரசிக்கும் உணர்வுகள் இருக்கும் தானே... வண்ணத்தை, வாசனையை, இயற்கையை, மேகத்தை, நிலவை ரசிப்பது போல், ஆண்களின் கம்பீரத்தையும், புத்திசாலித்தனத்தையும், அழகையும் ரசிக்கவே செய்வர். இது, ஒரு இயற்கையான உணர்வு!க.அந்தோணிராஜ், தேனாம்பேட்டை: பொது இடங்களில் கைகோர்த்துக் கொண்டும், பைக்கில் போகும் போது, வயிற்றைக் கட்டிக் கொண்டும் சென்று, வாலிப நெஞ்சங்களை சலனப்பட வைக்கும் ஜோடிகள் பற்றி...இவையெல்லாம் மிகச் சாதாரணமான, இயற்கையான செயல். இவை, எப்படி சலனப்பட வைக்கிறது என்பதை என்னால் எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. இதனால், சலனப்படும், 'இளம் நெஞ்சங்கள்' மனதை திடப்படுத்தும் நூல்களையும், உபன்யாசங்களையும் கேட்கட்டும்!எஸ்.தாரா, ராமநாதபுரம்: கறுப்பான உதடுகளை பெற்றிருக்கிறேன்; என்னுடைய தோழிகள் கேலி செய்கின்றனர். ரோஜா நிற உதடுகளைப் பெற என்ன வழி?ரோஜா நிற உதடுகள் மட்டும் தான் அழகு, கவர்ச்சி என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது உங்களிடம்... அல்லது எவர் கூறியது? கறுப்பு உதடுகளின் கவர்ச்சியே தனி; அந்த உதடுகளில் கொஞ்சம், 'கிளாஸ்' - பளபளப்பு எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்... அப்புறம் உங்களுக்கே கறுப்பு உதடுகளின் மகிமை புரிய ஆரம்பிக்கும்!ஆர்.முத்துக்கிருஷ்ணன், விழுப்புரம்: வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் உண்டாக என்ன வழி?முடிந்தாலும், முடியாவிட்டாலும், நம்மால் முடியும் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வளர்க்க வேண்டும். சோர்வு ஏற்படும் போதெல்லாம், நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களை படிக்க வேண்டும்; அவை ஊக்கத்தைத் தரும். மனதில் ஊக்கம் இருக்கும் போது, உற்சாகம் தானே வரும்; முயன்று பாருங்கள்!