உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

ம.ஜெபஸ்டியான், ராமநாதபுரம்: நான் ஒரு மர்ம நாவல் எழுதியுள்ளேன். அச்சில், 100 பக்கங்களுக்கு மேல் வரும். நானே சொந்தமாக அச்சிடவும் முடிவு செய்துள்ளேன். அதை, அப்படியே மொத்தமாக யாராவது வாங்கிக் கொள்வரா?ஓ... பழைய பேப்பர் கடைக்காரர்கள் இருக்கின்றனரே! புத்தகம் போடுகிறேன் பேர்வழி என்று கைக்காசை கரியாக்கி, கடனாளி ஆகிவிடாதீர்கள். இப்போது புத்தகம் படிக்கும் பழக்கம் தமிழர்களிடையே குறைந்து வருகிறது!கே.ஈஸ்வர், தாம்பரம்: கிராமத்து பெண்களை மட்டும் பேய் பிடித்து கொள்வது ஏன்?அறியாமைப் பேய் அவர்களை விட்டு இன்னும் அகலவில்லையே.... கல்வி அறிவு ஒன்று தான் பேயை ஓட்டும் திறமை படைத்தது!ஆ.செந்தில்நாதன், பல்லடம்: அரசியலில் இருக்கும் பெரும் புள்ளிகள் பலருக்கு, 'ஜெனரல் நாலேட்ஜ்' கொஞ்சம் கூட இல்லயே...அதனால், அவர்களுக்கு என்ன இழப்பு... அவர்களிடம் காசு பண்ணும் நாலேட்ஜ் இருக்கிறதே! இவர்களிடம் சிக்கி இழந்து கொண்டிருப்பதெல்லாம் நாம் தான்!என்.அருணாச்சலம், நீலகிரி: ஒருவன் முட்டாளாவது எப்போது?தன்னிடம் சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் எல்லாம் தனக்கு வேண்டியவர்கள் என நம்ப ஆரம்பிக்கும் போது!சி.ஜார்ஜ் ஸ்டீபன், அருப்புக்கோட்டை: நம் நாட்டை போலவே, ஹாலிவுட்டிலும், சினிமா நடிகர், நடிகையருக்கு ரசிகர் மன்றங்கள் உண்டா?ஹாலிவுட் வரை ஏன் போக வேண்டும்... இங்கே, நம் வட மாநிலங்களில் கூட நம்மவர்களைப் போன்று மன்றம் வைக்கும் அறிவு ஜீவிகள் இல்லை. சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் செயலை தமிழர் ஆரம்பித்து வைக்க, கன்னடரும், தெலுங்கரும் மட்டுமே அந்த அற்புதமான உன்னதத்தை பின்பற்றுகின்றனர்!பி.ஹைதர்அலி, ஈக்காட்டுதாங்கல்: என் தந்தை இறந்து விட்டார். என் பங்கு சொத்தாக, 50 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. சினிமா படம் எடுக்க ஆவல்; உங்கள் கருத்து என்ன?கெட்டுப் போவதோடு மட்டுமல்லாமல், நட்டப் பட்டும் போவீர்கள். படத் தொழிலில் இறங்கிய பலர் பாழாய் போயுள்ளனர். வேறு தொழிலில் இறங்குங்கள். தெரியாது என்றால், வங்கியில், பிக்சட் டெபாசிட் செய்து, ஹாயாக இருங்கள்!செ.அருண், மணலாறு: மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்தால், நாளடைவில் கணவனை மதிக்க மாட்டாள் மனைவி என்கிறானே என் நண்பன்...தான் சோம்பேறியாய் சுற்றி திரிவதற்கும், உங்களையும் தன்னைப் போல் மாற்றி விடவும் உங்கள் நண்பர் போடும் திட்டத்தின் வெளிப்பாடே அந்த, 'ஸ்டேட்மென்ட்!'நான் அறிந்தவரை, மனைவிக்கு உதவியாக இருக்கும் கணவரை, மேலும் மதிக்கின்றனரே தவிர மிதிக்கவில்லை மனைவியர்!க.சரண்யா, குமுளி: இந்தி நாடகங்களை தமிழில், 'டப்' செய்து, 'டிவி'யில் காட்டுகின்றனரே... எப்படி இருக்கிறது?அபத்த களஞ்சியம்; மொழி மாற்றம் செய்யப்படுவது கேலிக்குரியதாக இருக்கிறது. ஒரு நாடகத்தில் ஒரே ஆசாமி, குரலை மாற்றி மாற்றி ஏழு பேருக்கு பின்னணி குரல் கொடுப்பது கொடுமை. இது போன்ற நாடகங்கள் வரும்போது, வேறு சேனலை மாற்றி விடுவேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !