உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

க.பகவன்தாஸ், தெக்கலூர்: என் முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை; என்ன செய்யலாம்?சூப்பர் சான்ஸ் உமக்கு; உடனே, சினிமாவில் சேர்ந்துடுங்க. நம்ம சினிமா ஹீரோக்களுக்கு சரியான போட்டியாக இருப்பீர்கள்!அ.மணியன், விழுப்புரம்: காதலிப்பவர்களை எத்தனை விதமாக பிரிக்கலாம்?இரண்டே வகை; 1.டைம் பாஸ். 2.திருமண எண்ணத்துடன்!* ச.முத்துக்கிருஷ்ணன், சிறுகடம்பூர்: கர்வம், ஆத்திரம், கோபம் - - மூன்றில் எதை அடக்குவது எளிது?மூன்றுமே வெகு சுலபமாக அடக்கக் கூடியது தான்; ஆனால், மனித மனம் ஒத்துழைக்க வேண்டுமே!கே.அஜய்வர்மா, பொள்ளாச்சி: ஆண்களுக்கு, 'கற்பு' இருக்க வேண்டுமா, வேண்டாமா?'கற்பு' என்பது, மாயாஜால வார்த்தை; பத்து வரியில், இதற்கு பதில் அளித்து விட முடியாது. பெரிய கட்டுரையே எழுத வேண்டும் அல்லது நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும்.சி.அந்தோணி, சிவகங்கை: என் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடக்கிறது; என் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை. இதை சாக்காக வைத்து, என் மாமியார், அடிக்கடி வந்து,'டேரா' போடுகிறார். அவருக்கு என் குடும்ப சூழ்நிலையை நாசூக்காக எப்படி புரிய வைப்பது?இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தும் விஷயங்களில் நாள், நேரம் மற்றும் நாசூக்கு பார்ப்பது வீண்; நேரடியாகவே மாமியாரிடம் விஷயத்தை புட்டு புட்டு வைத்து, பண உதவி கேட்டுப் பாருங்கள். அப்புறம் உங்க ஊர் -இருக்கும் திசை கூட திரும்பிப் பார்க்க மாட்டார்.* வி.அஜிதா, பரமக்குடி: அதிகமாக, 'மேக் - அப்' செய்து கொள்ளும் பெண்களை, ஆண்கள் விரும்புவதில்லை என்ற பேச்சு, எந்தளவுக்கு உண்மை?நூற்றுக்கு நூறு உண்மை; தினமும் அலுவலகம் வரும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடத்தில், ஒரு இளம் பெண், 'கிராஸ்' செய்வார். ஓவர் மேக் -அப், லிப்ஸ்டிக், பவுடர், மை... அழகி என்ற நினைப்பு போலும்... சைக்கிளை நிறுத்தி, கீழே இறங்கி, 'இப்படி, 'மேக்- அப்' போட்டு வாழ்வை வெறுக்க அடிக்காதே...' எனச் சொல்லிவிட தோன்றும். ஆனால், தெரு முனையில் போலீஸ்காரர் இருப்பதால், சைக்கிளை வேகமாக மிதித்து விடுகிறேன்.* எஸ்.பொற்செல்வி, சிவகாசி: தனக்கு நிகராக படித்து, பணி புரியும் பெண்களிடமும், வரதட்சணை வாங்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்தக் கொடுமை மறைந்து விட்டது. ஆனால், 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற, மெத்த படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டம், ஏனோ இந்த விஷயத்தில், இன்னும் படுபாதாளத்தில் கிடப்பது ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் தருகிறது. கொடுப்பவர் இருக்கும் வரை கேட்பவர்களுக்கு பஞ்சமிருக்காது... 'முடியாது' என, முடிவெடுக்க, இந்த மாவட்டக்காரங்களுக்கு,'தில்' இருக்கிறதா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !