உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆர்.ஜவகர் பிரேம்குமார், நாகப்பட்டினம்: எப்போதும் பணத்தின் பின்னால் அலைபவர்களைப் பார்த்தால், உங்களுக்கு என்ன தோன்றும்?பரிதாபம் தோன்றும்! வாழ்வில் அனுபவிக்க வேண்டிய நல்ல விஷயங்கள், ஆயிரம் உள்ளன. இவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதே என்று எண்ணிக் கொள்வேன்! * ரா.பிரசன்னா, திருச்சி: பெயர், நிம்மதி... இதில் மனிதனுக்கு எது தேவை?பெயர் - எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம்... நிம்மதி - இது தான் தேவை மனிதனுக்கு... இரவு, 10:00 மணிக்கு தலையணையில் தலையை சாய்த்தால், உடனே துாக்கம் வரவேண்டும். அது இல்லாத வாழ்க்கை, நரகம்!கே.அம்புஜவல்லி, மதுரை: என் செயல்கள், முயற்சிகள் அனைத்தும், பாதியிலேயே நின்று போய் விடுகின்றனவே...உங்கள் சிந்தனை ஒரு முகமாக, அந்த செயலே, முயற்சியே குறிக்கோளாக இல்லாமல், சிதறி போவதனாலேயே இப்படி ஆகிறது. சிந்தனையை அலைய விடாமலிருக்க, முயற்சித்துப் பாருங்கள்; வெற்றி கிடைக்கும்!ம.நிவேதா, பெரியகுளம்: தற்போது யாரும், இயற்கை வைத்தியத்தை நாடுவதில்லையே... ஏன்?அவசர உலகம்; உடனடி தீர்வு குணம் எதிர்பார்க்கின்றனர்... அலோபதியை நாடுகின்றனர். இன்று, நிலைமை மாறி வருகிறது... இயற்கை வைத்தியர்களிடம் கூட்டம் சேருகிறது... 'உணவே மருந்து' என்ற தத்துவத்தை ஏற்று, இயற்கை வைத்தியத்திற்குத் திரும்பி வருகின்றனர். இந்த பதிலை எழுதும் நான், தன்வந்திரி தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து, முகத்திற்கு கடலை மாவு, சந்தனப்பொடி, பாலேடு கலந்து பூசி குளித்த பின் கிடைத்த புத்துணர்வை எப்படி சொல்வது... உணர்ந்து பார்த்தால் தான் தெரியும்!எஸ்.ரேணுகா, சென்னை: நல்ல கணவர், மேற்படிப்பு... இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்தாக வேண்டிய நிலை... ஒரு பெண், எதைத் தேர்வு செய்வது நலம்?இரண்டாவதை தான்! கல்வி அறிவு, நல்ல உயர் பதவியைப் பெற்று தரும். அது, வாழ்வை எதிர்கொள்ள தைரியத்தை கொடுக்கும்! நல்ல பணி இருப்பதால், வரன்கள், 'க்யூ'வில் நிற்கும்!* ஜி.எஸ்.கலாவதி, நெல்லை: ஆண் துணை இல்லாமல், ஒரு பெண் வாழ முடியாதா?நிச்சயமாக வாழ முடியும்! இன்று பல பெண்கள், திருமணம் செய்து கொள்ளாமலேயே, விடுதியிலோ, தனி வீடு எடுத்தோ வாழ்ந்து வருகின்றனர். நாட்டிய பேரொளி பத்மா சுப்ரமணியம், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர், மம்தா பானர்ஜி, டி.வி.எஸ்., குரூப்பில், டயர் தயாரிப்பு தொழிலை நிர்வகிக்கும், ஷோபனா ராமச்சந்திரன் ஆகியோர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கின்றனரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !