உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

** என்.அருண்குமார், பல்லடம்: பெண், தனித்து, சுயமாக, தைரியமாக வாழ, இந்த சமூகம் அனுமதிப்பதில்லையே... ஏன்?உங்களது கூற்று முற்றிலும் உண்மை இல்லை; சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவளை நெருக்கும் போது, சுயமாகிறாள்; தன் காலிலேயே நிற்கிறாள்... சமூகத்தின் அங்கீகாரத்தையும் பெறுகிறாள்.****எஸ்.கார்த்திகேயன், கிணத்துக்கடவு: உங்களின் எதிரி யார்?24 மணி நேரம் தான்; இதுவே, 36 மணி நேரம் ஒரு நாள் என இருக்கக் கூடாதா என நினைப்பவன் நான்!****தி.புவனேஸ்வரி, குறிஞ்சிப்பாடி: கல்லூரிகளில் படிக்கும் இளம் பெண்கள், தம் காதலைப் பற்றி, திருமணமான, வயதில் மூத்த பெண்களிடம் கூறலாமா?திருமணமான அப்பெண்ணிடம், இந்த இளம் பெண்ணுக்கு இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்துக் கூறி, ஆலோசனை கேட்கலாம்! அது கிடக்கட்டும். படிக்கிற வயதில் காதல், கத்தரிக்காய் எல்லாம் தேவையா?***** ஆர்.கிருஷ்ணன், திருத்தணி: நகரத்துப் பெண்கள், 35 வயதைத் தாண்டுகிற போதே கை, கால் மூட்டு வலி, முதுகுவலி, இடுப்பு வலி என முனகுகின்றனரே...பாட்டிகள், அம்மாக்கள், எல்லாம் உரலில் மாவு அரைத்தனர், அம்மியில் மசாலா அரைத்தனர். முறத்தால் புடைத்தனர், மத்தால் கடைந்தனர்... கை, கால் மூட்டுகளுக்கு வேலை கொடுத்தனர்; ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போ, ஜாலி, ஈசி கோயிங் லைப்... முனக வேண்டியதுதான் இருக்கும்!****க.மதன்குமார், மதுரை: அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியின் குடும்பத்தினர் பலரும் விபத்திலோ, சுடப்பட்டோ இறந்து போயுள்ளனரே...அங்கு மட்டும் என்ன? இங்கே, நேரு குடும்பத்தினரும் சுடப்பட்டோ அல்லது விபத்திலோ தானே மரணமடைந்துள்ளனர். அமெரிக்கர்கள் - முன்னேறிய நாடு என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட, 'செய்வினைதான் இதற்குக் காரணம்!' என நம்ப ஆரம்பித்திருப்பதை எண்ணும் போது, தமாஷாக உள்ளது.****பி.கன்னியப்பன், விழுப்புரம்: படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு அலைகின்றனரே...இந்தக் கருத்து தவறோ என்று எண்ணும் விதத்தில் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியான, 'சர்வே' ஒன்று! பட்ட மேற்படிப்பு படித்தவர்களிடையே சமீபத்தில் எடுத்த சர்வேயில், 79 சதவீதம் பேர், தனியார் துறை வேலையையே விரும்புவதாக கூறியுள்ளனர்.****எல்.நாராயணன், நெசப்பாக்கம்: இலவசங்களை, நம் எம்.பி.,க்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனரா?முழுமைக்கு மேலேயே பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு நாளுக்கு, 137 போன் கால்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம் இவர்கள். நம்ம எம்.பி.,க்கள் லேசுபட்டவர்களா? சராசரியாக, 274 போன்களைப் போட்டுத் தள்ளி விடுகின்றனர், 'ஓசி'யிலேயே!****என்.ஜீவானந்தம், பாலப்பட்டி: இன்றைய இந்திய இளவட்டம் பற்றி ஏதேனும் தகவல், சர்வே உண்டா?உள்ளதே... 15 முதல் 24 வயதுடைய ஆண், பெண் இருபாலாரிடமும் கேட்கப்பட்ட கேள்வி இது: 'திருமணத்திற்கு முன், 'செக்ஸ்' வைத்துக் கொள்ளலாமா?' அதில், மூவருக்கு ஒருவர் என்ற விதத்தில் வந்த பதில், 'தவறு இல்லை!' — பயமாக இருக்கிறது இன்றைய சமுதாயத்தை நினைக்கும் போது!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !