உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ப. ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை: சுறுசுறுப்பு என்றால் என்ன?சுறுசுறுப்பு என்றால், 'வாரமலர்' இதழ் மூலம் புரிந்து கொள்ளுங்கள்! பரிசை, 'சாங்ஷன்' செய்ய வேண்டியவர் வெளிநாட்டில் இருந்தால், 'நெட்' மூலம் வேலையை முடித்து விடுவார்! இப்போது புரிகிறதா, சுறுசுறுப்பின் பின்னணி!* டி.எச். லோகாவதி, மதுரை: சுக பிரசவம் ஆகும் என்று தெரிந்தும் கூட, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனரே... ஏன்?எத்தனை ஆண்டு தான், ஐ10 - ஐ20 கார்களில் சென்று வருவது... 2.4 கோடி மதிப்புள்ள, இத்தாலி நாட்டு, 'மசரட்டி' என்ற, 'ஸ்போர்டஸ்' கார் வாங்கி, ஊரை திரும்பிப் பார்க்க வைக்க ஆசை வந்திருக்கலாம்.எனக்கு தெரிந்து, பல பெண் டாக்டர்கள், பழைய, 'ஹெரால்டு' கார் போதும் என்ற நிலையில், இன்றும் சுகப் பிரசவம் தான் செய்கின்றனர்! * ஸ்ரீ பூவராகவன், காங்கேயம்: தமிழக வேலையை, தமிழர்களுக்கே தர வேண்டும் என்கிறாரே, தி.மு.க.,வின் உதயநிதி ஸ்டாலின்?அவர் அண்ணன் நடத்தும், 'டிவி' சேனலில், இதை புகுத்தி பெயரும், புகழும் பெறட்டும். அடுத்து, நாம் தொடர்வோம்! சா. சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை: சென்னை தான் உங்களுக்கு பிடிக்கவில்லை; பிடித்த நகரம் எது?அந்த கிராமம், நகரம் இல்லை! உங்கள் கிராமத்திலிருந்து, தெற்கு நோக்கி சென்றால், ஒரு அணை வரும். மொத்த பரப்பளவு, 40 அடி தான். அதைத் தொட்டதும், கண்ணீர் வரும் பாருங்கள்... 40 அடி வரை தான், தண்ணீரிலே கிடக்கலாம்! (வருகிறீர்களா? சோறு தண்ணி - காயும் உண்டு; மற்றவையும் உண்டு!) இன்பமாக யோசிக்கலாம், நேர செலவுக்கும் பஞ்சம் இருக்காது!* எல். குமார், திண்டுக்கல்: அந்துமணிக்கு எத்தனை மொழிகள் பேச, எழுத தெரியும்?'ஆரல்வாய் மொழி கணவாயிலே, ஆரேழு ஆழாக்கு நெல்லுக்கு இரு ஏழு வாழைப்பழமாம்!' சரியாக உச்சரிப்பேன், பேசுவேன்.நம் நாட்டின், பிற மொழிகளை புரிந்து கொள்ள முடியும்; ஆனால், பதில் சொல்லத் தெரியாது!உலகத்தில் உள்ள மூன்று மொழிகளில் மட்டுமே, 'ழ' உள்ளது. அது - தமிழ், மலையாளம், பிரெஞ்ச்!நாம் பெருமைப்பட வேண்டிய உச்சரிப்பை, 'தமிள்' - 'வாளைப் பலம்' என்று கூறுகின்றனரே...இது, தமிழ் மொழி ஆசிரியர்களின் தவறு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !