உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*எஸ்.சேது, தூத்துக்குடி: திராவிடம் - ஆரியம் இவற்றில் நம்பிக்கை உண்டா?'மனிதம்' - இதில் மட்டுமே உண்டு நம்பிக்கை!****ஆர்.தமிழ்ப்ரியன், விழுப்புரம்: எழுத்தாள ருக்கு கற்பனை ஊற்று எப்போது அதிகமாகும்...'பர்ஸ் காலி' என்று தெரிந்த மறுகணமே, நாவலுக்கான கரு உருவாகி விடும்; வெள்ளமென உருவெடுத்து விடும் கற்பனை!***** கே.பிரேம், சென்னை: மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?நிதி நிலையைப் பொறுத்தவரை சந்தேகம்தான்! குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும் செழிப்புடன் இருப்ப தென்னவோ உண்மைதான்!****ஆர்.இமெல்டா, பொள்ளாச்சி: 'இளைஞர்' என ஒரு ஆணை எந்த வயது வரை குறிப்பிடலாம்? அதே போல பெண்ணை, எந்த வயது வரை, 'இளம் பெண்' என குறிப்பிடலாம்?16 வயது வரை சிறுவன் - சிறுமி; 17 முதல், 30 வயது வரை இளம் பெண் - வாலிபன், இளைஞன் எனக் குறிப்பிடலாம்!****ஆர்.பாலு, காஞ்சிபுரம்: என் வயது 33; இன்னும் திருமணமாகவில்லை. இது வரையிலும் யாரையும் காதலித்தது இல்லை. இப்போது ஒரு பெண்ணை காதலிக்கிறேன். என் காதலை எப்படி அந்தப் பெண்ணிடம் தெரிவிப்பது?இன்னும் திருமணமாகவில்லை என்று கூறுகிறீர்கள். அதனால், தைரியமாக அப்பெண்ணின் பெற்றோரை அணுகி, பெண் கேட்டு, திருமணம் செய்து, பின் காதலியுங்களேன்!***** எஸ்.சந்தானம், திருவள்ளூர்: மத்திய அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்?மாநில அரசுகள் உரிமை பாராட்டும் நதி நீர் மீது கை வைக்க வேண்டும்; நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்! அவை வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும் - அவற்றை இணைக்க வேண்டும்! அப்புறம் எங்கேயோ போய்விடும் இந்தியா வின், 'ஸ்டேட்டஸ்!'****ஆர்.உமாசங்கர், தேனி: தாலியை மறைத்து, வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?சங்கிலித் திருடர்களுக்கு, 'டேக்கா' கொடுக்கும் கலையை, நன்கு கற்று அறிந்தவர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது!***** வி.தங்கராஜ், திருப்பூர்: தேச விரோத, சமூக விரோத சக்திகளை வளர்க்கக் கூடிய இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரிக்கிறீர்களா?நிச்சயமாக இல்லை... சிங்கப்பூரில் உள்ளது போன்று கட்டுப்பாடான ஜனநாயகம்தான் தேவை இங்கு இப்போது.****ஜி.வி.சரவணன், விருத்தாச்சலம்: 'டிவி'களில் வரும், 'டாக் ஷோ''க்களால், யாருக்கு என்ன பயன்?எல்லா மக்களுக்குமே பயன்தான். தெரியாத விஷயங்கள், மாறுபட்ட சிந்தனைகள், ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்கு உள்ள அக்கறை, கருத்துக்களை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்தான், 'டாக் ‌ஷோ'க்கள், அதை ஏன் கரித்துக் கொட்டுகிறீர்கள்! ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !