அந்துமணி பதில்கள்!
* கே. ரமேஷ், நாகர்கோவில்: என் நண்பன் அகம்பாவம் மிக்கவனாக இருக்கிறானே...அவர், தன்னால் எதுவும் செய்ய முடியும் என நினைப்பது தன்னம்பிக்கை... தன்னால் செய்ய முடியாதது ஒன்றுமே இல்லை என நினைப்பது அகம்பாவம்! அவரை தன்னம்பிக்கை கொள்ள செய்யுங்கள்!டி.கே. சுகுமார், கோவை: ஆண்டுக்கு, 30 'டிரஸ்' எடுப்பதாகக் கூறியுள்ளீர். அப்போ, பயன்படுத்திய உடைகளை என்ன செய்வீர்கள்?ஒரு உடையை ஆண்டுக்கு, 12 முறை தான் பயன்படுத்தப் போகிறேன்; எல்லாமே புதிதாகத்தானே இருக்கும்... நண்பர்கள் தான் பலர் இருக்கின்றனரே... அவர்களிடம் போய் சேர்ந்து விடும்!ம. வசந்தி, திண்டிவனம்: பொங்கலுக்கு, பொருட்களுக்குப் பதில், பணமாக கொடுத்திருக்கலாமே... உபயோகமாக இருந்திருக்குமே?உண்மைதான்... மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும்! பணமாக கொடுத்தால், அதிலிருந்து, 'கமிஷன்' எப்படி வசூலிக்க முடியும்? பொருளாக வாங்கினால் தானே, ஆளும் கட்சியினருக்கு, 'கட்டிங்' கிடைக்கும்!எம். கணேசன், மதுரை: சினிமா, 'டிவி'யில், எது ஆபாசம், எது கவர்ச்சி?என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் கணேசன்... நீங்கள் பார்க்கும்போது, அது, கவர்ச்சி! உங்கள் மகளோ அல்லது மகனோ பார்க்கும்போது, அது, ஆபாசம்!வி. நித்திஷ், நெல்லை: என் புதுக்கவிதை, 'வாரமலர்' இதழில் வெளியாக வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்?தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிய வேண்டாம்... தமிழை பிழையில்லாமல் எழுதத் தெரிய வேண்டும். முயற்சித்துப் பாருங்கள்.* ஆர். கோபால், தென்காசி: இந்தக் காலத்தில் தலைவலி யாருக்கு அதிகமாக வருகிறது?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்குத் தான். கை நீட்டல் அவர்களிடம் அதிகம் இருந்ததால், இப்போது, தி.மு.க., அரசால் அதிகமாக தலைவலி வருகிறது!ஏ. கமலா, திருப்பூர்: டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிக்கு, கதை அனுப்பியிருந்தேன்; தேர்வாகவில்லை. என்ன செய்வது?வாரமலர் இதழில், 'ரெகுலர்' சிறுகதையாக வெளியிட சில கதைகள் பரிசீலனையில் உள்ளது. அதில் உங்கள் கதைக்கு வாய்ப்பு கிடைக்கிறதா பார்ப்போம். மோ. கல்பலதா, சென்னை: பொங்கல் தொகுப்பு எப்படி இருந்ததாம்?மஞ்சள் பையின் உள்ளே இருந்தவை, 'பிளாஸ்டிக் கவர்'களில் இருந்ததாம்... அவற்றின் மீது, ஹிந்தியில் பெயர் அச்சிடப்பட்டு இருந்ததாம்! இதுதான் தமிழக அரசின், 'பிளாஸ்டிக்' தடை மற்றும் ஹிந்தி எதிர்ப்பு என்பதற்கான அர்த்தம்!