உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* டி. ரவீந்திரன், சென்னை: 'பா.ம.க., ஆட்சிக்கு வந்து, மதுக்கடைகளை மூடட்டும்...' என்று சொல்கிறாரே, அமைச்சர் துரைமுருகன்...'கட்சி ஆரம்பித்து, 32 ஆண்டுகளாகியும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை...' என்று புலம்புகிறார், பா.ம.க.,வின் அன்புமணி. 320 ஆண்டுகள் ஆனாலும், பா.ம.க., ஆட்சிக்கு வரப்போவதில்லை... தமிழகத்தில் மது நீடிக்கும்!ஆர். முருகன், நெல்லை: கெடுதிகள் எதனால் வரும்... உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்...கடன் பட்டார் வாழ்வு... கண்டித்து வளர்க்காத பிள்ளைகள்... பிரிவு ஏற்பட்டால்... கோபம் அதிகமானால்... சிந்திக்காமல் எடுக்கும் முடிவுகளால், கெடுதிகள் வரக்கூடும்!வி. பார்த்தசாரதி, சென்னை: விடுதலை சிறுத்தை, திருமாவளவனை, கர்நாடக மாநிலத்தில் துரத்தி, துரத்தி அனுப்பி விட்டனரே...இனி, தமிழகத்திலும் அது போலதான் நடக்கப் போகிறது... பொறுத்திருந்து பாருங்கள்...பி. வசந்தா, விருதுநகர்: கைம்மாறு கருதாதவர்கள் என்று யாரை எல்லாம் சொல்லலாம்?அவர்களை எல்லாம் மழையுடன் ஒப்பிடலாம்... அவர்கள் மாற்று உதவி எதையும் எதிர்பார்த்து செய்ய மாட்டார்கள்!* த. மூக்கையா, சென்னை: 'தே.மு.தி.க., பெரிய சக்தியாக உருவெடுக்கும்...' என்கிறாரே, அக்கட்சியின் பொருளாளரும், தலைவர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா...இம்மாதிரியான, தமாஷ் பேட்டிகளை படித்து, ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள் மூக்கையா... நேரம் நமக்கு மிக முக்கியமானது!தி. முருகேசன், திருப்பூர்: ஒருவனுக்கு, வெற்றி எப்போது கிடைக்கும்?அவர் தன் குறிக்கோளிலும், முயற்சியிலும் சுறுசுறுப்பு கொடுத்து விட்டால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். இதையெல்லாம் மறந்து விட்டு, விதியின் மீது கவனம் வைக்கக் கூடாது!என். கதிர்வேல், நெல்லை: என் நண்பன் ஒருவன், எப்போதும் மன அழுத்தத்துடன் உள்ளானே...அவரது துயரங்களை, ஆத்மார்த்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்; அப்போது, மன அழுத்தம் போய் விடும்!சி. கணேசன், கள்ளக்குறிச்சி: எனக்கு மறதி நோய் இருக்கிறதே... இதற்கு தடுப்பூசி ஏதும் உண்டா?மருத்துவ நண்பரிடம் கேட்டேன்... இதுபற்றிய ஆராய்ச்சி இன்னும் நடந்து வருகிறதாம்... அதனால், இப்போதைக்கு தடுப்பூசி எதுவும் இல்லை எனக் கூறினார்!சி. விஷ்ணு, நெல்லை: தங்கள் ஆட்சியின் நன்மை, தீமைகளை தினமும் ஆராய்ந்து, அதை சரி செய்யாத ஒரு அரசின் நிலை என்னவாகும்?மெல்ல, மெல்ல தன் ஆட்சியை இழந்து விடும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !