அந்துமணி பதில்கள்!
*கே.குமார், ஆவரம்பட்டி: இந்திய உணவு களுக்கு, வெளிநாடுகளிலும் வரவேற்பு உண்டா?நல்ல வரவேற்பு உண்டு; ஆனால், வெள்ளைக்காரர் கள் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் பதார்த்தங்கள், 'சப்' என்றே இருக்கும்... இங்கிலாந்தில் ஏறக்குறைய, 30 ஆயிரம் இந்திய உணவகங்கள் இருக்கின் றன. இவற்றின் மூலம், பல ஆயிரம் இந்தியர்கள் பிழைக்கின்றனர்.***** பா.கிருஷ்ணன், உடுமலைப்பேட்டை: வட மாநில நதிகளை, தென் மாநில நதிகளுடன் இணைத்தால், நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சிலர் கூறுகின்றனரே...கண்டிப்பாக ஓடும்! ஆனால், சில சுயநல சக்திகளின் ரத்த ஆற்றை சந்தித்த பிறகே இணைப்பு முயற்சி வெற்றி அடையும். நாட்டின் முன்னேற்றத்திற்காக, சுயநலமிகளின் ரத்தத்தை எடுப்பதில் பாதகமில்லை!****க.வேலு, கும்மிடிப்பூண்டி: இந்தியா, இதுவரை அண்டை நாடுகளுடன் எத்தனை முறை போர் செய்துள்ளது?சுதந்திரம் பெற்றதில் இருந்து, 1971 வரை நான்கு முறை போர் செய்துள்ளது. 1971ல் இருந்து இன்று வரை போர் எதுவும் கிடையாது. ஆனால், ஐ.நா., கேட்கும் போதெல்லாம், இந்திய ராணுவம் பல நாடுகளுக்கும் சமாதானம் காக்கச் சென்றுள்ளது. போர் நடந்த காலக் கட்டங்களில் ராணுவத்திற்கு ஆன செலவு பல கோடி ரூபாய்.***** என்.சங்கர், திருநீர்மலை: தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து, பணியாற்ற முயலும் ஒரு பெண்ணை, உடன் பணியாற்றுவோர் குத்திக் காட்டி மறைமுகமாக கிண்டலடிக் கின்றனரே... இவர்களை என்ன செய்ய?இரண்டு வழிகள் உள்ளன.*பணியிடத்தை மாற்றிக் கொள்வது.* முடியாத பட்சத்தில் இந்த காதில் வாங்கி, அந்த காது வழியே வெளியேற்றி விடுவது. இதற்கு நிறைய மனபலமும், பயிற்சியும் தேவை... முயன்றால் முடியாதது எதுவுமே இல்லையே!**** எஸ்.கமலா, ரிஷிவந்தியம்: பணியில் தாமதம் ஏற்பட்டதற்காக ஆசிரியரிடம், 'குட்டு' வாங்கிய அனுபவம் உண்டா?தாமதம் என்ற மதத்திற்கு நான் எதிரி ஆயிற்றே... 'தட்டு' - முதுகில் செல்லமாக, பணியைப் பாராட்டி, 'தட்டு' அவ்வப்போது வாங்கும் அனுபவங்கள் தான் உண்டு!***** த.இந்திரன், அருப்புக்கோட்டை: தொலை தூர பஸ் பயணங்களிலும், தியேட்டர்களிலும் சீட்டின் இடையே கையையும், காலையும் தும்பிக்கை போல நுழைத்து, துழாவி சில்மிஷம் செய்யும் சதை பிண்ட வெறியர்களுக்கு உங்கள், 'அட்வைஸ்' என்ன?'அட்வைஸ்' எல்லாம் கொடுத்து பயன் ஒன்றும் இருக்கப் போவதில்லை. பெண்கள் எப்போதும் தம் கழுத்து சங்கிலியில் ஒன்று, இரண்டு, 'ஊக்கு'களை வைத்திருக்க வேண் டும். சில்மிஷம் செய் யும், 'தும்பிக்கை'க்கு இதன் மூலம் அழுத்த மாக, 'டிரீட்மென்ட்' கொடுக்க வேண்டும்; அப்போதாவது திருந்துகின்றனரா என பார்க்க வேண்டும்!****ரா. ஷோபனா, கோவை: மனதில் ஆழமாக பதிந்துவிட்ட சில ஆண் நண்பர்களை மறப்பது எப்படி?நண்பர்கள் என்கிறீர்கள்... ஒன்றுக்கு மேற்பட்டவர் என்பது புரிகிறது... ஒருவர் மறந்தார் என்றால், அவர் மீது குற்றம் சொல்லலாம்... ஆனால், பலரும் மறந்து விட்டனர் என்றால், தவறு உங்கள் மீது தான் எனக் கொள்ள வேண்டும்...பிரிந்து சென்றவர்களையே நினைத்துக் கொண்டி ருக்காமல், மனதை வேறு திசைக்கு திருப்புங்கள்... மறந்து விட முடியும்!***