அந்துமணி பதில்கள்!
* த.மூக்கையா, சென்னை: 'செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில், அமலாக்கத்துறை மீது, எதிர்க்கட்சிகள், அரசியல் சாயம் பூச நினைப்பது, கண்டனத்திற்குரியது...' என்று, குஷ்பு கூறுகிறாரே...மிகச் சரியாகத் தான் கூறியிருக்கிறார்... ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தானே, அமலாக்கத்துறையின் வேலை. இதற்கு அரசியல் சாயம் பூச நினைப்பது எந்த விதத்தில் நியாயம்! வி.கோகிலா, சென்னை: வேலியே பயிரை மேய்வது போல் தெரிகிறதே...திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலிகள், பயிரை மேயத் தொடங்கி விட்டன. அந்த வேலியை பிரிக்க சென்றால் அதற்கு, 'ஹார்ட் அட்டாக்' வந்து விடுகிறது. என்ன செய்ய! முருகு. செல்வகுமார், சென்னை: தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு அரசியல், தமிழக மாணவர்களின் சாதனைகளுக்கு முன் எடுபடுமா?எடுபடுவதற்கு வாய்ப்பே இல்லை... இவர்களின் 'நீட்' தேர்வு எதிர்ப்பு குரலுக்கிடையே, தமிழக மாணவர், பிரபஞ்சன் தேசிய அளவில், முதலிடம் பெற்று உள்ளாரே... அடுத்து, தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இதே மனநிலை தான் இருக்கும்! ஜெ.ஆர்.குணவதி, பரமக்குடி: 'கடைகளின் பெயர்கள் முதலில் தமிழில் இருக்க வேண்டும்; பிறகு தான் ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்...' என்று முதல்வர் சொல்வது சரியா?மிகச் சரியாக முடிவெடுத்துள்ளார்... ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்துள்ளேன்... அந்த நாடுகளில், உள்ள கடை, ஹோட்டல்கள் என அனைத்து இடங்களிலும் அவர்கள் மொழியில் தான் பெயர் பலகை வைத்துள்ளனர். மு.சம்சுதீன், துாத்துக்குடி: 'இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்க தகுதி வாய்ந்த ஒரே தலைவர், எடப்பாடி பழனிசாமி தான்...' என்று, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை கூறியுள்ளாரே...இவரை சினிமாவில் நடிக்க விட்டால், வடிவேலுவே காணாமல் போய் விடுவார் போலுள்ளதே... அவ்வளவு தமாஷா, 'ஸ்டேட்மென்ட்' விடுத்துள்ளார்! * ச.சந்திரகலா, அவ்வையார் பாளையம், ஈரோடு: பிரதமராக வரக்கூடிய தமிழர் யாரோ?தமிழகத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் யாருக்குமே ஹிந்தி தெரியாது... ஆங்கிலம் புரியும்... பேச வராது. இவர்களில் யாருக்கும் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்காது!