உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

லெ.நா. சிவக்குமார், சென்னை: தாங்கள் விரும்பி சாப்பிடும், 'தாய் - காம்போ' சென்னையில், சாமானிய விலையில் எங்கே கிடைக்கும்?சாமானிய விலையில் கிடைக்காது. 'ஸ்டார்' ஹோட்டல்களில் தான் கிடைக்கும். அங்குள்ள விலை நிலவரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என, நினைக்கிறேன்! * ஜி. குப்புசுவாமி, சென்னை: தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் எல்லாம், 'தினமலர்' நாளிதழ் படிப்பவர்கள் தானே?தி.மு.க.,வின் முக்கிய பேச்சாளர் ஒருவர், சமீபத்தில், தீபாவளி வாழ்த்து சொல்ல, பட்டுப் புடவை, பேன்ட், சட்டை, இனிப்புகளுடன் வந்து என்னை சந்தித்தார். அவர் கூறியது: 'தி.மு.க., அமைச்சர்கள் எல்லாம், காலையில் முதலில் படிப்பது, 'தினமலர்' நாளிதழை தான். தி.மு.க.,வுக்கு, 'ஜால்ரா' தட்டும் இதழ்களை பிறகு தான் பார்க்கின்றனர்...' என்றார்.கே.ஆர். குசலாம்பாள், புதுடில்லி: அறுவடைக்கு பின், விவசாய நிலத்திலுள்ள பயிர் கழிவுகளை எரித்து, புகை மாசு ஏற்படுத்துவதை விட, வேறு வழியே இல்லையா, மணி?ஏன் இல்லாமல்... கால்நடைகளை அங்கே மேய விட்டு, சரி செய்யலாமே! ம. பல்லவி, சேலம்: தீபாவளிக்கு எத்தனை உடைகள் வாங்கினீர்கள்?மூன்று பேன்ட், மூன்று சட்டைகள், வாசகரிடமிருந்து, தீபாவளி பரிசாக வந்து விட்டன. அதனால், நான் ஒன்றும் வாங்கவில்லை! கி. சுமதி கிருஷ்ணமூர்த்தி, சென்னை: என் மகள், 9ம் வகுப்பு படிக்கிறாள். பா.கே.ப., பகுதியில் வெளியாகும் உங்கள் படங்களை பார்த்து விட்டு, உங்களின் நிஜ முகத்தை பார்க்க வேண்டும் என்கிறாளே...வேண்டாம் என்று சொல்லி விடுங்கள். நேரில் பார்த்தால், 'ஐயோ, இவ்வளவு அசிங்கமான முகமா?' என்று சொல்லி விடப்போகிறார்! * எஸ். லீலா, நெல்லை: தப்பித் தவறி என்ன செய்யக் கூடாது?யாரையும் காயப்படுத்தி விடாதீர்கள். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் வார்த்தைகளால், யாரையும் புண்படுத்தி, ரணமாக்கி விடாதீர்கள்!சம்பத்குமாரி, பொன்மலை: காவிரி நீருக்காக, யார் யாருக்கோ கடிதம் எழுதுகிறாரே, ஸ்டாலின். சோனியாவுக்கு, ஒரே ஒரு கடிதம் எழுதினால் போதுமே... கர்நாடக முதல்வர் பணிய மாட்டாரா?ஸ்டாலின் யார் யாருக்கோ, காவிரி நீர் தொடர்பாக கடிதம் எழுதுவது, சோனியா காதுக்கு போய் இருக்காதா? அவர், ஏன் கர்நாடக முதல்வரிடம் வலியுறுத்தவில்லை.ஸ்டாலின், சோனியாவிற்கு கடிதம் எழுதாமல் இருப்பதற்கு காரணம், கூட்டணி உடைந்து விடக்கூடாதே என்பதற்குத் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !