உள்ளூர் செய்திகள்

ஜீன்ஸ் அணிந்தால் அவ்ளோதான்!

இந்த படத்தில் உள்ள, 'பப்ளிமாஸ்' முகத்துக்காரரை கொஞ்ச நேரம் உற்றுப் பாருங்கள்; உங்கள் இதழ்களில் மெல்ல சிரிப்பு விரியும். இவரது தோற்றம் தான் காமெடியாக இருக்கிறதே தவிர, ஆள், பயங்கரமான சர்வாதிகாரி. வட கொரியாவின் அதிபரான, 32 வயதான, கிம் ஜோங் யுன் தான், இந்த அமுல் பேபி.'அரசு அதிகாரிகள் மட்டுமே கார் வைத்திருக்க வேண்டும்; வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவோ, மொபைல் போனில், வெளிநாடுகளுக்கு பேசவோ, இணைய வசதியை பயன்படுத்தவோ கூடாது, மேலும், தாங்கள் விரும்பியபடி, முடி வெட்டிக் கொள்ள கூடாது...' என்பது, இந்த சர்வாதிகார அதிபர், பொதுமக்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளில் சில!லேட்டஸ்டாக, வட கொரியாவைச் சேர்ந்த யாரும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிய கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளார். காரணம், நீல நிற ஜீன்ஸ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடையாளம் என்பது, இவரது அரிய கண்டுபிடிப்பு.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !