மலைக்க வைக்கும் பரிசுப் பொருட்கள்!
பிரிட்டன் இளவரசர் வில்லியம் - இளவரசி கேத் மிடில்டன் தம்பதிக்கு, சமீபத்தில் பிறந்த குட்டி இளவரசருக்கு, ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. குட்டி இளவரசர் பிறந்ததும், பிரிட்டன் முழுவதும், உற்சாகம் கரைபுரண்டோடியது. லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு, பிரிட்டனின் பல பகுதிகளிலிருந்தும், பொதுமக்களிடமிருந்து, பரிசுப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பொம்மைகள், ஆடைகள், விளையாட்டு பொருட்கள் என, விதம் விதமான பரிசுப் பொருட்கள், அரண்மனையில், மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து, பரிசுப் பொருட்கள் வந்தபடி உள்ளதால், அரண்மனை நிர்வாகம், திணறிப் போயுள்ளது. இதனால், அந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும், அவற்றை அனுப்பியவர் களுக்கே, திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளாராம், இளவரசி, கேத் மிடில்டன்.'குட்டி இளவரசர் மீது, நீங்கள் வைத்துள்ள அன்புக்கும், பாசத்துக்கும் நன்றி' என்ற, ஒற்றை வரி கடிதத்துடன், பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பும் வேலைகள், தீவிரமாக நடந்து வருகின்றன.— ஜோல்னா பையன்.