உள்ளூர் செய்திகள்

பைசாகி!

சீக்கிய மத மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை, பைசாகி. பஞ்சாப், சீக்கிய காலண்டர்படி, ஆண்டின் முதல் மாதம் பைசாகி. அதன் முதல் நாள், புது வருட பிறப்பாக கொண்டாடப்படுகிறது.அத்துடன், வசந்த கால கோதுமை அறுவடை முடிந்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது.முகலாய மன்னன் அவுரங்கசீப்பால், சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு, டெக் பகதுார்; இஸ்லாம் மதத்திற்கு கூண்டோடு மாற கட்டாயப்படுத்தப்பட்டார். மறுத்ததால், சிரச்சேதம் செய்யப்பட்டார்.இதையடுத்து, 10வது குரு பதவி ஏற்றார்.அதே சமயம், சீக்கியர்களிடம் ஒரு வேகம் பிறந்தது. இதனால், மதத்திற்காக உயிர் துறக்கவும் தயார் நிலையில் உள்ள படை ஒன்று, வருடப்பிறப்பன்று துவக்கப்பட்டது. அனந்தபூர் சாகிப் மற்றும் அமிர்தசரசில், மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது, பைசாகி. அன்று, ஊர்வலம், கீர்த்தனைகள் பாடியபடி, சீக்கிய மத கிரந்த புத்தகத்துடன் வருவர்; பாங்கரா நடனம் மற்றும் பல நாட்டு புற கலைகளின் சிறப்பு வெளிப்பாடுகள் என, அமர்க்களப்படும்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, ஜம்மு நகரம், கத்வா, உதம்பூர் மற்றும் சம்பா; பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர், இமாசல பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தின் பல நகரங்களில், மிக சிறப்பாக ஊர்வலங்களுடன் இன்றும் நடக்கிறது, பைசாகி விழா.இந்த சமயத்தில், பல இடங்களில் கண்காட்சிகள், போட்டிகள், சீக்கியர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகள் கட்டாயம் நடக்கும்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !