புல்லட் ரயில் ஓட்ட ஐந்து விதமான தேர்வு முறை!
சமீபத்தில், சீனாவில் புல்லட் ரயில் பணிப்பெண்களுக்கான தேர்வு நடந்தது. இப்பணிக்கு, 90 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ஷான்தோங் ஜியா தோங் பல்கலைக்கழகத்தில், ஐந்து விதமான தேர்வுகளாக நடைபெற்ற இத்தேர்வில், 1,500 பெண்கள் பங்கேற்றனர்.இப்பணிக்கு, 166 -176 செ.மீ., உயரமும், 52-58 கிலோ எடையும் இருக்க வேண்டும். மேலும், பணிப்பெண்கள் இதயம், கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான், புல்லட் ரயிலில் பணிபுரிய முடியும். நம் நாட்டை போல், லஞ்சம் கொடுத்து வேலையில் சேர முடியாது.— ஜோல்னாபையன்.