உள்ளூர் செய்திகள்

சொந்தக் காசில் புத்தகம் வாங்கும் அரசியல்வாதி!

அரசியல்வாதிகளில் பெரும்பாலோருக்கு, புத்தகம் படிக்கும் பழக்கம், குறைவு. அதுவும், சொந்த பணத்தில், புத்தகம் வாங்கி படிப்போர் மிகக் குறைவு. ஆனால், மத்திய அரசில் அமைச்சராக இருந்த கே.பி.உன்னிகிருஷ்ணன், பணம் கொடுத்து தான், புத்தகம் வாங்கி படிப்பார். இப்படி வாங்கிப் படித்த புத்தகங்கள், 20 ஆயிரத்துக்கும் மேல், இவரிடம் உள்ளன. இவர், டில்லி வாசம் முடித்து, கோழிக்கோடு திருவண்ணூரு என்ற ஊரில் குடியேறினார். அப்போது, இரண்டு பெரிய லாரிகளில், இந்த புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. இவர் அமைச்சராக இருந்த போது, ஒரு முறை, பன்சிலால் இவர் வீட்டுக்கு வந்தார். அங்கு குவிந்து கிடந்த புத்தகங்களை கண்டு திடுக்கிட்டவர், அவைகள் அனைத்தும் பணம் கொடுத்து வாங்கியவை என்பதை அறிந்த போது, 'நீங்க நிஜமாகவே, ஒரு புத்தக புழு தான்...' என்று, புகழ்ந்தார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !