பிட்ஸ்(ஸா)!
வால்மீகி, கண்ணப்ப நாயனார், வேடுவராக இருந்தவர்கள்; சபரி, வேடுவ இனத்தை சேர்ந்த, ராம பக்தை. ராம பக்த குகன், வேடுவர். இப்படி, வேடுவ குல பக்தர்களை நினைவு கூறும் போது, ஜராசு என்ற என் பெயரின் முதல் இரண்டெழுத்தை, பெயராக கொண்ட ஒரு வேடுவன் பெயரும், ஞாபகத்துக்கு வந்தது. அவதார புருஷனான கண்ணன் யோகத்தில் ஆழ்ந்திருந்தான். ஜரா என்ற வேடுவன், பறவை என்று தவறுதலாக நினைத்து, அம்பை எய்தான். யோக நித்திரையிலிருந்த கிருஷ்ணன் இறந்தார். பகவானை நெருங்க வேண்டுமென்றால், அடுத்த ஜென்மத்தில், வேடுவ இனத்தில் பிறக்க வேண்டுமோ என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒரு வேடுவனால் கண்ணன் மரித்தான் என்று அறிந்ததும், எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டேன்.— பாக்கியம் ராமசாமி.