உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி சவாரி போவோமா!

ஒரு காலத்தில், நம்மூரில் எங்கு பார்த்தாலும் மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் சாலைகளில் ஓடின. காலப்போக்கில், இவை காணாமல் போனது.இலங்கை நாட்டில், சிகிரி சரோங் என்ற கிராமத்தில், இந்த மாட்டு வண்டி காட்சியை காணலாம்.சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு, மாட்டு வண்டியில் சவாரி செய்வதற்கு மிகவும் பிடிக்கும். மற்ற மோட்டார் வாகனங்களை பயன்படுத்த விரும்பாமல், மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் பயணித்து மகிழ்கின்றனர். இதனால், வண்டி ஓட்டும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. —ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !