உள்ளூர் செய்திகள்

பாக்ஸ் மேட்டர் !

டில்லியில்  நவீன டாய்லட்டுகள்!வெளிநாடுகளில் இருப்பதைப்போல சர்வதேச தரத்தில், மிக நவீன பொதுக் கழிப்பிடங்கள் டில்லியில் கட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டில்லி, 'ஹயாத் ரீஜென்சி' என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் அருகில் உள்ள ரிங்ரோடு, ஓட்டல் அசோக் மற்றும் சப்தர்ஜங் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இந்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 'யு.எஸ்., அட்வர்டைசிங்' என்ற நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள இவை, மிகவும் சுத்தமாகவும், சுற்றுச்சூழல் வசதி மட்டுமல்லாது ஆடம்பர ஓட்டல்களில் இருக்கும் டாய்லட்களைப் போல இருக்கின்றன. ஓட்டை கூரைகளோ, ஒழுகும் சுவர்களோ, நாற்றமடிக்கும் தரைகளோ இவற்றில் இல்லை. மார்பிள் கற்களால் கட்டப்பட்டு, வாஷ்பேசின் வசதி செய்யப்பட்டிருக்கின்றன. சோப் நீர் மற்றும் நாப்கின் பேப்பர் உள்பட பல வசதிகளும் இலவசமாக இங்கு கிடைக்கின்றன.. வெளிப்புற சுவர்கள் எல்லாம் டாய்லட்டுகள் என்பதே தெரியாத அளவுக்கு நவீன விளம்பர பலகைகளால் அமைக்கப் பட்டுள்ளன.  24 மணி நேரமும் பாதுகாவலர்கள் வசதியும் உள்ளதால், பெண்கள் பலரும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.                   — ஜோல்னா பையன்.யானை வளர்க்கும் பெண்கள் ! பெண்களால் யானையை வளர்க்க முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளனர் மூன்று சகோதரிகள். பாலக்காடு அருகே, கல்பாத்தி என்ற ஊர் அருகே, சாத்தபுரம் என்ற அக்ரஹாரம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும், அவரது சகோதரிகள் லட்சுமி, சாவித்திரி ஆகியோர் யானை ஒன்றை வளர்க்கின்றனர். யானை வளர்ப்பது இவர்களது பரம்பரை தொழில். ஜெயஸ்ரீயின் தாத்தா நாராயண அய்யர், தந்தை அப்பு அய்யர் ஆகியோர் யானை வளர்ந்தனர். இதில் அப்பு ஐயரை, 'யானை அய்யர்' என்றே அழைப்பர். சென்னை, ஊட்டி போன்ற ஊர்களுக்கு சினிமா ஷூட்டிங்கிற்கு இவர்கள் யானையை அழைத்து செல்வர். ஜெயஸ்ரீ சகோதரிகளிடம் இரண்டு யானைகள் இருந்தன. சமீபத்தில், ஒரு யானை இறந்து விட்டது. இன்னொரு யானைக்கு சாத்தபுரம் பாபு என இவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். வீட்டின் அருகே உள்ள தென்னந்தோப்பில் யானையை வளர்த்து வருகின்றனர். 'நாங்கள் யானையை பிழைப்புக்காக வளர்க்கவில்லை. கோவில் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அழைத்து செல்வோம். அதை வைத்து வருமானம் பார்க்கும் எண்ணம் இல்லை. குடும்ப பாரம்பரியத் திற்காக இந்த யானையை வளர்த்து வருகிறோம்!' என ஜெயஸ்ரீ சகோதரிகள் கூறியுள்ளனர். — ஜோல்னா பையன்.மது குடித்தால் கர்ப்பிணிகளுக்கு நல்லதாம்!கர்ப்பிணிகள் எப்போதாவது மது குடித்தால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு எந்த தீங்கும் வராது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனில், லண்டன் பல் கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். 11 ஆயிரம் கர்ப்பிணிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாரத் தில் ஒன்று அல்லது இரண்டு பெக் மது அருந்தும் பெண்களின் கர்ப்பப்பையில் வளரும் குழந்தைகள் நன்றாக வளரும். ஆனால், தினமும் அதிக அளவு குடிக்கும் பெண் களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் மன நிலை கண்டிப்பாக வேறுபட்டுதான் இருக்கும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளின் கணவர்கள் மொடாக்குடியர்களாக இருந் தால், கர்ப்பிணிகளுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் வரும் என இன்னும் யாரும் ஆய்வு நடத்த வில்லை. — ஜோல்னா பையன்.'இஞ்சி தின்ற குரங்கு போல...' என்றொரு பழமொழி உண்டு. அதன் பொருள், பலருக்கு தெரியாது. இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது, குரங்குக்கு மிகுந்த மோகம். இது, மாங்காய் இஞ்சியைப் போன்றது. காரமில்லாதது; சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதில் ருசி கண்ட குரங்கு, அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து, கடித்துச் சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் சொல்லத் தேவையில்லை. ஏற்கனவே குரங்கு முகம், இப்போது கேட்க வேண்டுமா?                                            ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !