பாக்ஸ் மேட்டர்
* நீண்ட நகங்கள்... - இப்படியும் சாதனை!கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, ஒவ்வொருவரும் விதவிதமான சாதனைகளைச் செய்வர். அமெரிக்காவில் ஒரு பெண், தன் கை விரல்களில் நீண்ட நகங்களை வளர்த்து சாதனை படைத் துள்ளார்.அந்த பெண்ணின் பெயர் லீ ரெட்மான்ட். இளம் வயது முதலே ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என நினைத்தார். கை விரல்களில் மிக நீண்ட நகம் வளர்த்து, புது சாதனை படைக்கலாம் என முடிவு செய்தார். அதன்படி, பல ஆண்டு களாக இவர் கை விரல்களில் நகங்களை வெட்டுவதே கிடையாது. அந்த நகங்கள் உடைந்து விடாமல் இருக்க, இவர் படும் பாடு சொல்லி மாளாது. இப்போது, உலகிலேயே மிக நீண்ட கை விரல் நகங்களைக் கொண்டவர் இவர்தான். சாதனை படைத்து என்ன பயன்? சாப்பிடுவதற்கும், உடை மாற்றுவதற்கும் இவர் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாமா செய்வது?— ஜோல்னா பையன்.