உள்ளூர் செய்திகள்

சன்னி லியோனின் பாக்சிங் பிசினஸ் !

கனடாவைச் சேர்ந்த, பிரபல நடிகையும், மாடல் அழகியுமான, சன்னி லியோன், 32. ஏடாகூடமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர். சமீபகாலமாக, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், ஒரு ஹாலிவுட் படத்தில், குத்துச் சண்டை வீராங்கனையாக நடிப்பதற்கு, அங்குள்ள பிரபலமான குத்துச் சண்டை வீரர் ஒருவரிடம் பயிற்சி பெற்றுள்ளார். அந்த பயிற்சி மையத்துக்கு, அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதை பார்த்த சன்னி லியோனுக்கும், கல்லா கட்டும் ஆசை வந்து விட்டது. லாஸ் ஏஞ்சல்சில், குத்துச் சண்டை பயிற்சி அளிக்கும் மையம் மற்றும் ஜிம் ஆகியவற்றை திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். இதனால், அதிர்ந்து போயுள்ள, அந்த குத்துச் சண்டை வீரர், 'பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும், இந்த பெண்ணுக்கு, உடம்பெல்லாம் விஷம். நம், தொழிலுக்கு உலை வைத்துவிட்டாளே...' என, புலம்பி வருகிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !