ப்ரூட் பன்ச்!
தேவையான பொருட்கள்: பப்பாளித் துண்டுகள், மாம்பழம், திராட்சை, பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, கொய்யா - ஆகிய அனைத்தும் சேர்த்து ஒரு பெரிய கப், சர்க்கரை - ஒரு கப், தண்ணீர் - ஒரு கப், எலுமிச்சை - பாதி, ரோஸ் எசன்ஸ் - அரை தேக்கரண்டி, சோடா - தேவைக்கேற்ப.செய்முறை: தண்ணீரில், சர்க்கரையை சேர்த்து காய்ச்சி, ஆற விடவும். இதில் எலுமிச்சையைப் பிழியவும். இதை நறுக்கி வைத்திருக்கும் பழங்களுடன் கலந்து மிக்சியில் நன்றாக அடித்து, 'பிரிஜ்'ஜில் வைத்தால், இரண்டு நாட்கள் வரை கெடாது. தேவைப்படும்போது, சோடா மற்றும் எசன்ஸ் கலந்து பருகலாம்.