உள்ளூர் செய்திகள்

பார்க், மலை, குளம் அமைக்க...

கொலுவில் பார்க் அமைக்க விரும்பினால், நவராத்திரி ஆரம்பிக்கும் நாலைந்து நாட்கள் முன்பே, கடுகு, வெந்தயம், ராகியை பிளாஸ்டிக் கப்புகளில் விதைத்து, வளர விட்டு கொள்ளலாம். வெள்ளை வெளேரென்ற அலுமினிய டிரேயில் நீர் நிரப்பி, குளம் மாதிரி அமைத்து, படகில் பொம்மைகளை மிதக்க விட்டால் பார்க்க அழகாக இருக்கும்.குழந்தைகள் விளையாடும் கிளே-யில் தீக்குச்சிகளைச் செருகி, கலர் கலராக வேலி கட்டி, உள்ளே, பிளாஸ்டிக் காட்டு விலங்குகளை வைத்து, 'அனிமல்ஸ் பார்க்' அமைக்கலாம்.களிமண்ணில் மலைபோல செய்து, அதில் கேழ்வரகை அழுத்தி வைத்து விட்டால் பச்சைப்பசேலென மலை கிடைக்கும். இதை கொலுவுக்கு மூன்று நாட்களுக்கு முன் செய்து விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !