ஆளை அசத்தும் ஆடம்பர படகு!
தற்போது, வெளிநாடுகளில், பணக்காரர்களின் கடல் பயணத்துக்காக, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல், ஆடம்பர படகுகளை வடிவமைத்து கொடுக்க துவங்கியுள்ளனர்.ரஷ்யாவைச் சேர்ந்த இகோல் லோபகேவ் என்ற படகு வடிவமைப்பாளர், அரை நட்சத்திர வடிவிலான, ஆடம்பர படகிற்கான வடிவமைப்பை தயார் செய்துள்ளார்.இந்த படகு, துாரத்தில் இருந்து பார்க்கும்போது, கடலில், அரை நட்சத்திரம் ஒன்று மிதந்து வருவது போல் தோற்றமளிக்கும்.படகு முழுவதும், கண்ணை கவரும்,எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்படவுள்ளன; 36 பேர், படுத்து துாங்கும் அளவுக்கு அறைகளும் அமைக்கப்படுமாம்.இதுதவிர, விருந்து நிகழ்ச்சிகளின்போது, 200 பேர் பங்கேற்கும் அளவுக்கு இட வசதியும் இதில் அமைக்கப்படவுள்ளது. 162 அடி நீளமும், 196 அடி உயரமும் உடைய இந்த படகிற்கு, ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை என்ன தெரியுமா? 3,000 கோடி ரூபாய். ஆர்டர் கொடுத்தால், ஒரு சில மாதங்களில் இந்த படகை வடிவமைத்து கொடுக்க தயாராக இருப்பதாக, தெரிவிக்கிறார் இகோல்.— ஜோல்னாபையன்.