சுறா மீன்களுக்கு புற்றுநோய்!
'கடல் வாழ் உயிரினங்களில், சுறா மீன்களுக்கு மட்டும் புற்றுநோய் வருவது இல்லை...' என்று இது நாள் வரை நம்பி வந்தனர். சுறா மீன்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், மிக ஆழமான காயங்களை கூட குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும், சுறாக்களில் இருந்து புற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வந்தன; இதற்காக, ஆண்டு ஒன்றுக்கு, நூறு மில்லியன் சுறாக்கள் கொல்லப்படுகின்றன.ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில், சுறா மீன்களுக்கும் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதனால், சுறாக்களை பயன்படுத்தி, புற்றுநோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் திட்டம், கேள்விக்குறியாகி உள்ளது.— ஜோல்னாபையன்.