மார்பில் இதய வடிவிலான பென்குயின்!
இப்போது பெரும்பாலான இளைஞர்களும், இளைஞிகளும் அணியும், 'டீ-சர்ட்'டில் இதய வடிவிலான ஓவியம் இருப்பதை காணலாம். காதலை வெளிப்படுத்தும் இந்த இதயத்தோடு, பென்குயின் ஒன்று நடமாடி வருகிறது.கடும் குளிர் பிரதேசத்தில் வசிக்கும் அந்த பென்குயின் உடலில், இயற்கையிலேயே இவ்வாறு இதயம் போன்று வடிவம் தோன்றியுள்ளது. பல லட்சம் பென்குயின்களில் இதுபோல் ஏதாவது ஒன்றிற்குத்தான் இப்படி இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பல விருதுகளைப் பெற்ற பிரபல போட்டோகிராபரும், சினிமா தயாரிப்பாளருமான சூ பூட் என்ற பெண், இந்த பென்குயினை படம் எடுத்துள்ளார். இவர் பல முறை வட, தென் துருவ பகுதிகளுக்குச் சென்று, படம் எடுத்துள்ளார். 'கடந்த, 20 ஆண்டுகளில் பல முறை பென்குயின்களை படம் எடுத்துள்ளேன், ஆனால், இதுபோன்ற ஒரு அபூர்வ காட்சியை இதுவரை பார்த்ததில்லை...' என்கிறார் இவர்.— ஜோல்னா பையன்.