உள்ளூர் செய்திகள்

வாங்களேன்... ரத்த ஜூஸ் சாப்பிடலாம்!

அமெரிக்காவின் ஹாவெர்ஹில் பகுதியைச் சேர்ந்த காதல் தம்பதி, டிராவென், 38, பெனிங்கோப், 20. இவர்களின் பொழுது போக்கு என்ன தெரியுமா? ஒருவர் ரத்தத்தை, மற்றொருவர் ஜூஸ் போல் சாப்பிடுவது தான். பிளேடால் கீறலை ஏற்படுத்தியோ அல்லது ஊசி மூலம் ரத்தத்தை எடுத்தோ, சுவைப்பதில், இவர்களுக்கு அலாதி ஆனந்தம்.இந்த விசித்திரமான பழக்கம் குறித்து, டிராவென் கூறுகையில்,'ஒருவர் ரத்தத்தை ஒருவர் குடிப்பதன் மூலம், எங்களுக்கு இடையேயான உறவு, மேலும் பலப்படுகிறது. வாரத்துக்கு மூன்று முறையாவது ரத்தம் குடித்து விடுவோம். பலவீனமாக இருக்கும் நேரங்களில் எல்லாம், ரத்தம் குடிப்போம். பாலியல் உறவில் ஏற்படும் இன்பத்தை விட, ரத்தம் குடிக்கும்போது ஏற்படும் இன்பம் தான், எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது...' எனக் கூறி, அலற வைக்கிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !