நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம் (20)
கடந்த, 19 வாரங்களாக என்னுடன் பயணித்த வாசகர்களுக்கு, நன்றி சொல்லும் வாரம் இது:ஆம்... இந்த வாரத்துடன், என் டிராமாயணத்தின் ஒரு காண்டத்தை நிறைவு செய்கிறேன். உங்களிடம் பகிர்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. காலமும், நேரமும், கடவுளின் அனுக்கிரகமும் கூடி வரும்போது, மீண்டும் சந்திப்போம். ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு மனிதனுக்கு, குடும்பத்தின் அன்பும், ஆதரவும் மட்டும் இருந்து விட்டால், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அதற்கு நானே உதாரணம்.என் இன்றைய சிறப்பான நிலைக்கும், சந்தோஷத்திற்கும் காரணமான தந்தை எஸ்.வி.வெங்கட்ராமன், தாய் அலமேலு, மனைவி உமா மகேஸ்வரி, மகள் அனுராதா சேகர் - மாப்பிள்ளை பரத், பேத்தி அதிரா பரத், மகன் அஷ்வின், மருமகள் ஸ்ருதி, பேத்தி ஆர்ணா அஷ்வின், பேரன் ஆர்யன், தங்கை சுசிலா - கணவர் சேதுராமன், தம்பி ராஜா வைத்தியநாதன் - மனைவி கிரிஜா, கடைசி தம்பி கிருஷ்ணமூர்த்தி - லதா கிருஷ்ணமூர்த்தி.என்னுடன் ஆரம்ப காலம் முதல் பயணிக்கும், ஈ.வெ.ரா.மோகன், ஸ்டில்ஸ் ரவி, ஆடிட்டர் ராமகிருஷ்ணன், சுரேஷ் சாரி, வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், வின், 'டிவி' தேவநாதன் யாதவ், சந்துரு நாடகப்பிரியா நிர்வாகி கிருஷ்ணகுமார், நெல்லை வசந்தன்.என்னுடைய சம்பந்திகள் கோபிசெட்டிபாளையம் ஜெயராமன் - மாதங்கி, போரூர் சவுந்திரராஜன் - ஜோதிலட்சுமி, மனைவியின் சகோதரர் பிரபுராம் - தாரணி மற்றும் உலகெங்கிலும் இருந்து என்னை நேசிக்கும் ரசிகர்களாகிய நண்பர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நான் இப்போது குடியிருக்கும் வீட்டை வாங்க உதவிய, 'தினமலர் - வாரமலர்' அந்துமணி ஆகியோருக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்!கடந்த, 40 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். என் நாடகங்களை காண, நீங்கள் வாங்கும் டிக்கெட் மூலம் வரும் வருமானத்தில் கணிசமான பகுதி, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு, நல நிதியாக வெகு காலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போதும், ஸ்ரீ சுகர் பொதுத்தொண்டு நிறுவனம், நாடகப்பிரியா டிரஸ்ட் மூலமாக இது தொடர்கிறது.வாசகர்கள் பார்க்கும் வடிவங்கள் வேண்டுமானால், 'ஐபேட், ஆன்ட்ராய்ட் போன்' மற்றும் 'டிவி' என்று, பலவித வடிவங்களில் மாறலாம். ஆனால், அதில் பார்க்க வேண்டிய விஷயம், அன்று தொட்டு இன்று வரை, என் நாடகமாகவும் இருக்கிறது; இருக்கும்.இன்றைய ரசிகர்களின், 'டிரெண்டை' புரிந்து, நானும் நாடகத்தை தற்போது, 'ஆன்லைனில்' வழங்கி வருகிறேன். 100 நிமிடத்தில், 200 சிரிப்பிற்கு, 'கியாரண்டி'யான இந்த நாடகத்தை, நீங்கள் குடும்பத்துடன் வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்து பார்க்கலாம் என்பது தான். எத்தனையோ விருதுகள், எவ்வளவோ கவுரவ டாக்டர் பட்டம் பெற்றாலும் ரசிகர்கள், என் நாடகத்தை பார்த்து ரசித்து தரும் கை தட்டலைத்தான் பெரிதினும் பெரிதாக மதிக்கிறேன்.தேசியமும், தெய்வீகமும் தான், என் இரு கண்கள். என் எல்லா உடையிலும் தேசியக் கொடியின் சின்னம் இடம் பெற்றிருக்கும். அதே போல, என் சம்பந்தப்பட்ட எல்லா புகைப்படங்களிலும், 'கடவுள் நம்மோடு இருக்கும் போது, யார் நம்மை எதிர்க்க முடியும்...' என்று, ஒரு வாசகம் தவறாது இடம் பெற்றிருக்கும்.வாசகர்களாகிய உங்களுக்கு, என் நினைவாகவும், நிறைவாகவும் அந்த வாசக வார்த்தையே பரிசாக தந்து தொடரை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்!இவரை பற்றி அவர்ஸ்ரீ எஸ்.வி.சேகர்ஜிக்கு நமஸ்காரம். நாடக மேடையில் நீங்கள் தனித்துவமானவர். உங்கள் திறமை காரணமாக, நீங்கள் பிறந்த தமிழ் மண்ணிற்கு மட்டுமின்றி, இந்த நாட்டுக்கே பெருமை சேர்த்து வருகிறீர்கள். நாடகத்திற்கு தரும் அதே முக்கியத்துவத்தை சமூக சேவைக்கும் தந்து வரும் உங்கள் பண்பு, பாராட்டத்தக்கது மட்டுமல்ல, போற்றத்தக்கதும் கூட. மென்மேலும் வாழ்க்கையில், கலையில், சமூகத்தில் வெற்றிகளை குவித்திட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.— பாரதப் பிரதமர் மோடி- நிறைவு பெற்றது.என்னைத் தொடர்பு கொள்ள விரும்புவோர், மொபைல் எண்: 98410 23545மின்னஞ்சல் முகவரி: mylaporemla@gmail.com- எல். முருகராஜ்