உள்ளூர் செய்திகள்

வருகிறார்... கறுப்பு ஜேம்ஸ்பாண்ட்!

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு, ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இதுவரை, 23 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் திரைக்கு வந்துள்ளன. கடைசியாக, 'ஸ்கைபால்' என்ற படம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 24 வது படமாக, 'டெவில் மே கேர்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதிலும், டேனியல் கிரக் தான், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார்.இதையடுத்து, 25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில், முதல் முறையாக, கறுப்பினத்தை சேர்ந்த, இத்ரிஸ் எல்பா என்ற நடிகர், ஜேம்ஸ் பாண்டாக நடிக்க போவதாக, ஹாலிவுட் பரபரத்து கிடக்கிறது. இவர், சமீபத்தில் திரைக்கு வந்துள்ள, 'பசிபிக் ரிம்' என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தவர். இதுவரை, சீன் கானரி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரக் உள்ளிட்ட நடிகர்கள் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளனர். இவர்களில் யாருமே, கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இத்ரிஸ் எல்பா தான், இந்த குறையை போக்க போகிறார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !