உள்ளூர் செய்திகள்

ஏலத்துக்கு வருகிறது உலகின் பிரமாண்ட முட்டை!

பல நூற்றாண்டுகளுக்கு முன், யானைப் பறவை என்ற, மிகப் பெரிய பறவை, பூமியில் வாழ்ந்ததாகவும் டைனோசரை விட, இந்த யானைப் பறவை தான், உருவத்தில் பெரியதாக இருந்ததாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டைனோசரை போலவே, இந்த யானைப் பறவையும், தற்போது அடியோடு அழிந்து விட்டது. இதன் முட்டை ஒன்று, தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால், மடகாஸ்கர் வனப் பகுதியில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முட்டை, 13-17ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என, தெரிய வந்துள்ளது. இந்த முட்டையின் உயரம், 30 செ.மீ., நாம், அன்றாடம் பார்க்கும், கோழி முட்டையை விட, இந்த முட்டை, பல மடங்கு பெரியது. இந்த பிரமாண்ட முட்டை, லண்டனில் விரைவில் ஏலத்துக்கு வருகிறது. இந்த முட்டை, 25 லட்சம் ரூபாய்க்கு, ஏலம் போகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !