அசல் அல்ல; நகல்!
நாக்பூர் நகர வீதிகளில், பாதுகாவலர் யாருமின்றி நடந்து செல்லும் நரேந்திர மோடியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், இவர் நிஜ மோடி அல்ல, பாண்டுரங்கா பாலே என்ற, 68 வயது பத்திரிகை விற்பனையாளர்!இவர், எங்கு சென்றாலும், 'மோடி ஜி, மோடி ஜி...' என்று ஆட்கள் கோஷம் போடுகின்றனர். ஒருநாள், பா.ஜ., கூட்டத்துக்கு, இவர் சென்றிருந்த போது, இவரைப் பார்த்த பத்திரிகையாளர்கள் இந்த உருவ ஒற்றுமை பற்றி செய்தி வெளியிட்டு இவரை பிரபலமாக்கினர். இன்று எங்கு சென்றாலும் ஆட்கள் இவரை சூழ்ந்து, 'மோடிக்கு ஜே...' என்று கோஷம் போடுகின்றனர்.— ஜோல்னாபையன்.