உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கும், நாய்க்கும் சம்பந்தம் உண்டுங்க!

கோர தாண்டவமாடி வரும், 'கொரோனா வைரசை' கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் விழி பிதுங்கி வருகின்றன. அறிகுறியே இல்லாமல் வைரஸ் பரவுவதால், யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க வழி தெரியாமல், மருத்துவ நிபுணர்கள் திண்டாடி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, ஐரோப்பிய நாடான பிரிட்டன், புது திட்டத்தை உருவாக்கி உள்ளது. மோப்ப நாய்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. 'லேப்ராடர்' வகை நாய்கள், இதுபோன்ற வேலையை செய்வதில் கில்லாடிகள். புற்றுநோயாளிகளை அடையாளம் காண்பதற்கு, ஏற்கனவே இந்த நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, 'கொரோனா' நோயாளிகளை கண்டறிவதற்கும் இந்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கியுள்ளது. பயிற்சி வெற்றி பெற்றால், ஒரு மணி நேரத்தில், 100 நோயாளிகளை இந்த நாய்கள் கண்டுபிடித்து விடுமாம். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !