துப்பறியும் பெண்!
பெண்களால் எந்த துறைகளிலும், சிறப்பாக செயல்பட முடியும் என்று, பலர் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், துப்பறியும் வேலையிலும், தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று, நிரூபித்து வருகிறார் கொச்சியை சேர்ந்த, ஆக்னஸ் என்ற பெண்மணி. கடந்த, 25 ஆண்டுகளாக, இவர் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இன்று, குடும்ப வாழ்க்கையிலும், தொழில் துறையிலும் பல ஏமாற்றங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தங்கள் மகன், மகள்களின் நடவடிக்கை மீது சந்தேகப்படும் பெற்றோரும், கணவன் மீது சந்தேகப்படும் மனைவியும், மனைவியை நம்பாத கணவரும், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியை நாடுவதுண்டு. இந்த, 25 ஆண்டுகளாக, இவர் கண்டுபிடித்த உண்மைகள் ஏராளம். இத்துறையை தவறான வழிக்கு பயன்படுத்துவதில்லை என்ற உறுதியில் உள்ளார் ஆக்னஸ்.— ஜோல்னாபையன்.