குறைந்து போன வீணை தயாரிப்பு!
வீணை தயாரிப்புக்கு பெயர் பெற்ற ஊர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம். ஒரு காலத்தில், இங்கு, பல குடும்பங்கள், இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஆனால், இன்று, இரண்டு குடும்பங்கள் மட்டுமே வீணை தயாரிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். வீணை செய்வதற்கு பலா மரத்தையே தேர்ந்தெடுப்பர். 50 கிலோ மரத்தை செதுக்கி, ஏழு கிலோவாக்கி, வீணை உருவாக்கப்படும்.ஒரு வீணையை உருவாக்க குறைந்தபட்சம், 20 நாட்கள் தேவை; இன்று, இசைத் துறையில் மின்னணு கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், வீணை உற்பத்தி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.— ஜோல்னாபையன்.