தீபாவளி!
* பஞ்சாபில் நசிகேதனுக்கு, எமதர்ம ராஜன் உயிர்பிச்சையும், சாவித்திரிக்கு புத்திர வரமும் அளித்த நாளாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது* தீபாளிக்கு மறுநாள், தன் விக்ரம சகாப்தத்தை துவங்கினான், விக்ரமாதித்யன். நம் நாட்டுக்கு வந்துபோன, முஸ்லிம் யாத்ரீகர் அல்பெருனியின் பயணக் குறிப்பிலும், தீபாவளி பற்றி ஒரு செய்தி காணப்படுகிறது* மராத்தியர்கள் தீபாவளியை, தாம்பூலத் திருநாளாக கொண்டாடுகின்றனர்* அகல் விளக்குகள் ஏற்றும்போது, விளக்கு வைக்கும் தரை எண்ணெய் பிசுக்காகாமல் தவிர்க்க, வீட்டில் உபயோகத்தில் இல்லாத, ஐந்து அல்லது ஏழு குழியுள்ள இட்லி தட்டில் அகல் விளக்குகளை ஏற்றி வீட்டு வாசலில் வைக்கவும். இது மாடர்னாக இருப்பதோடு, தரையும் பாழாகாது* 'ராஜமார்த்தாண்டம்' எனும் நுால், தீபாவளியை, 'சுகராத்திரி' என்று கூறுகிறது. நீலமேகபுராணம் - தீப உத்சவம் என்றும், காமசூத்திரம் - கூராத்திரி என்றும், நாகா நந்த காவியம் - தீயப்பரதியனுஷ்தம் என்றும் தீபாவளியை குறிப்பிடுகின்றன.