17 குட்டிகளை பெற்ற நாய்!
தாயையும், குழந்தையையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்வது இப்போது சாதாரணமாகி விட்டது. இதே போல், பிரசவ வேதனையில் துடித்த நாய் ஒன்றுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பின் தான், அந்த நாய் வயிற்றில், 17 குட்டிகள் இருப்பது தெரிய வந்தது.போலந்து நாட்டில், வார்சா நகரில் உள்ள மிருக மருத்துவமனை ஒன்றில், கடந்த வாரம் இந்த ஆபரேஷன் நடந்தது. இந்த நாய் பெற்ற, 17 குட்டிகளில், எட்டு ஆண், ஒன்பது பெண். இந்த நாயின் பெயர், 'ஹனியா!' அதன் வயது, நான்கு. மிகவும் சோர்ந்து காணப்படும் ஹனியாவை சுற்றி, 17 குட்டிகளும் படுத்து தூங்கும் காட்சியை, எல்லாரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.— ஜோல்னா பையன்