உள்ளூர் செய்திகள்

தானத்திலும் புதுமை!

இந்திய தலைநகரான புதுடில்லியிலுள்ள, நொய்டா பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படிப்பவர், ஏஞ்சல் செவானி. இவர், விலை உயர்ந்த ஆடைகளை அணியும்போது, வறுமையில் வாடுவோரை நினைத்து வருந்துவார். அதன் விளைவாக, தான் ஓரிரண்டு முறை பயன்படுத்திய ஆடைகளில், ஏதாவது சித்திரம் வரைந்து, புதுத்துணி போல் மாற்றி, ஏழை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார்.'அவர்கள் இதை உடுத்தியிருப்பதை பார்க்கும்போது, மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது...' என்கிறார். படத்தில், இவர் அளித்த ஆடையை அணிந்தபடி நிற்கிறது, ஏழை குழந்தை ஒன்று!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !