உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கூடம் போகாமலே...

படத்தில் இருக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த குட்டியம்மா காந்த என்ற மூதாட்டிக்கு, 106 வயது. நுாற்றாண்டை கடந்த இவருக்கு, சமீபத்தில், சிறந்த மாணவிக்கான மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர், முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து முதன் முறையாக படிக்கச் துவங்கினார். தேர்வில், 100க்கு 89 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்வானார்.டில்லியில் நடைபெற்ற விருது அளிக்கும் விழாவில் கலந்துக் கொள்ள, முதல் முதலாக விமானத்தில் பயணித்துள்ளார். அந்த, 'த்ரில்' அனுபவத்தை, மற்றவர்களிடம் கூறி மகிழ்கிறார், இந்த சாதனை மாணவி. — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !