போதையில் மிதந்த பைலட் கைது!
கடும் குடிபோதையில் விமானத்தை ஓட்டி வந்த பைலட் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜ் லா பெர்லி என்ற, 49 வயதானஅந்த பைலட், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். 'எந்த நகரத்திற்கு செல்கிறீர்கள்?' என அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். 'நியூயார்க் செல்கிறேன்...' என்றார் அவர். ஆனால், அவர் இயக்க வேண்டிய விமானம் டெட்ராய்ட் நகருக்கு செல்ல வேண்டும். அவர், வழக்கத்தை விட, நான்கரை மடங்கு அதிக போதையில் இருந்தார். அவருக்கு, ஆறு மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர், 20 ஆண்டுகளாக பைலட்டாக பணியாற்றியுள்ளார்.— ஜோல்னா பையன்.