அப்படியே சாப்பிடலாம்!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல டிசைனர், டெபி விங்கம். வித்தியாசமான ஆடைகள், ஷூக்களை வடிவமைப்பதில் வல்லவர். தற்போது இவர், அரேபிய நாட்டு மணமகளைப் போன்ற தோற்றத்தில், ஆள் உயர சிலையை கேக்கில் உருவாக்கி, அதற்கு, லுல்லா என, பெயரிட்டுள்ளார்.சாக்லேட், பருப்பு வகைகள் உள்ளிட்ட, பொருட்களை வைத்து இச்சிலையை தயாரித்துள்ளார். இதன் விலை, பல லட்சம் ரூபாய்.இந்த கேக் சிலை, ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி முடிந்ததும், இதை விற்பனை செய்து விடுவர்.— ஜோல்னாபையன்.