உள்ளூர் செய்திகள்

பாதுகாக்கப்படும் ஐன்ஸ்டீன் மூளை!

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன், ஏப்.,17, 1955ல் ரத்த குழாய் வெடித்து, தன், 76வது வயதில் மரணமடைந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, 'அவர் மூளையின் ஒரு பகுதியை, பாதுகாத்து வைத்தால், பிற்காலத்தில், அது, அரிய பொக்கிஷமாக இருக்கும்...' என்று நினைத்த மருத்துவர், தாமஸ் ஹார்வே, ஐன்ஸ்டீன் மகன், ஹான்ஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் அனுமதி பெற்றார்.தற்போது, அந்த மூளையிலிருந்து எடுக்கப்பட்ட பாகங்களை, நியூஜேர்சி பிரின்ஸ்டன் மெடிக்கல் சென்டர் மற்றும் மேரிலாந்தில் உள்ள, 'நேஷனல் மியூசியம் ஆப் ஹெல்த் அண்ட் மெடிசின்சிலும்' வைத்துள்ளனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !