சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வீடு!
ஹாலிவுட்டின் பிரபல நடிகை எமிலி பிளன்ட். நடிப்புடன், சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும், இவருக்கு ஆர்வம் அதிகம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம்களில், தானாகச் சென்று பங்கேற்கிறார்.இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், 11 கோடி ரூபாய் செலவில், மிகப் பெரிய பங்களாவை கட்டியுள்ளார். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் இயற்கையான வகையில், இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இதற்காக, பங்களாவின் ஒரு பகுதியில், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய எந்த பொருட்களும், இந்த பங்களாவில் இல்லை. ஐந்து ஏக்கர் பரப்பில், நான்கு படுக்கை அறைகளுடன் கூடிய இந்த பங்களாவில், சமீபத்தில் தான் குடியேறினார் எமிலி. 'நடிப்பில் மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காகவே, இந்த பங்களாவை கட்டியுள்ளேன்...' என்கிறார் எமிலி.— ஜோல்னா பையன்.